Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நியோமேக்ஸ் வழக்கு.. நிறுவன இயக்குநர்கள் வைத்த கோரிக்கை! வாய்ப்பில்ல ராஜா.. கையை விரித்த நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: நியோமேக்ஸ் ரியல் எஸ்டேட் மற்றும் தனியார் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சுமூக தீர்வு ஏற்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கக் கோரி நியோ மேக்ஸ் இயக்குநர்கள் நீதிமன்றத்தை நாடினர். ஆனால் அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிறுவனம் பல்வேறு போலி நிறுவனங்கள் பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு தொடர்பாக நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுமூக தீர்வு ஏற்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கக் கோரி நியோ மேக்ஸ் இயக்குநர்கள் நீதிமன்றத்தை நாடினர். இவர்கள் தாக்கல் செய்த மனுவில்,

 The Madurai High Court is scheduled to deliver its judgment on the Neomax case today

"மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக பாஜக பிரமுகர் வீரசக்தி மற்றும் கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் என பலர் உள்ளனர். நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கி, மனைகளுக்குள் ஹோட்டல், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனையை லே-அவுட் பெற்று, அதனை விற்பனை செய்து முதலீடு செய்தவர்களுக்கு கொடுத்து வருகின்றோம். இந்நிலையில், நியோமேக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் சொத்துக்கள், நிலங்கள் ஏராளமாக உள்ளன. எனவே, எங்கள் மீது புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்னையை சரி செய்ய விரும்புகிறோம். இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணக்கு வந்தது. விசாரணையில் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் கோரிக்கைக்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

"நியோமாக்ஸ் நிறுவனம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து நிலத்தை பங்கீடு செய்வது குறித்து மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. 32,048 பேர் முதலீடு செய்துள்ளார்கள் என நிறுவனமே உத்தேசமாகத்தான் குறிப்பிட்டுள்ளது. மொத்தத்தில் எத்தனை முதலீட்டாளர்கள் என்பது முழுமையான புலன் விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும்.மேலும், முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகை எவ்வளவு என்பதை குறிப்பிடவில்லை. எனவே நீதிபதி கமிட்டி அமைத்தால், அது மறைமுகமாக புலன் விசாரணையைப் பாதிக்கும். கடந்த பல ஆண்டுகளாக இது போல் நிதி நிறுவன மோசடி குறித்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் விசாரணை நிலுவையில் உள்ளது. சில குழுக்களில் விசாரணை நீதிபதிகள், விசாரணையில் இருந்து விலகி விட்டனர்.

மேலும், நியோமேக்ஸ் தாக்கல் செய்துள்ள பிரமான வாக்குமூலத்தில் 32,048 முதலீட்டாளர்கள் என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இதனை அடிப்படையாகக் கொண்டு சராசரியாக கணக்கிட்டால் 32,048 முதலீட்டாளர்களுக்கு கொடுப்பதற்கு 49 கோடியே 72 லட்சம் சதுர அடி தேவைப்படுகிறது.ஆனால் அவர்கள் டி.டி.சி.பி அப்ரூவல் பெற்ற இடம் 5 கோடியே 9 லட்சம் சதுர அடி மட்டுமே உள்ளது. மேலும், இப்போது அவர்களிடம் இருக்கும் நிலத்தின் அடிப்படையில் 32,048 முதலீட்டாளர்களுக்கு அவர்கள் பிரித்து தருவதாக சொல்கிற 2 கோடியே 23 லட்ச சதுர அடியை சராசரியாக பிரித்துக் கொடுத்தால் ஒருவருக்கு 697 சதுர அடிதான் கொடுக்க முடியும். எனவே இது சாத்தியமற்றது. எனவே, நியோமாக்ஸ் தரப்பில் தாக்கல் செய்த விசாரணை குழு அமைப்பது குறித்த மனு தள்ளுபடி செய்ய வேண்டும்" என அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் நிறுவனத்தின் இயக்குநர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+