Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து.. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாட்டில் 2000ம் ஆண்டு முதல் நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நீர்நிலை தகவல்களுக்காக தனி இணையதளத்தை 6 மாதத்தில் தொடங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நீர் நிலை ஆக்கிரமிப்பு என்பது வெறும் 20 ஆண்டுகளில் தான் மிக உச்சபட்சமாக நடந்ததாக கூறப்படுகிறது. பலரும் ஏரிகளை ஒட்டி வீடுகள் கட்டியது, குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டியது, நீர் நிலை வழித்தடங்களை ஆக்கிரமித்து வீடு கட்டியது, ஆறுகளின் கால்வாய்களை ஆக்கிரமித்து பிளாட் போட்டது எல்லாமே வெறும் 20 முதல் 25 வருடங்களில் தான் அதிக அளவில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

The patta issued to those occupying water bodies have been cancelled In Tamil Nadu since 2000 HC

இது போன்று நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. உயர்நீதிமன்றமும்இந்த விவகாரத்தில் அடிக்கடி கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வைக்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றமே நேரடியாக இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை வண்டியூர் கண்மாய் கரையில் மேம்பால பணி நடக்கிறது. இதேபோல் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் இருவழிச்சாலை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. நீர்நிலைகள் அழிக்கப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், வண்டியூர் கண்மாய் கரையில் மேம்பால பணி மற்றும் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் இருவழிச்சாலை பணிக்கு தடை விதித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட இடங்களை நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பாலம் மற்றும் சாலைப்பணி உள்ளிட்ட இந்த திட்டங்கள் குறித்து நாங்கள் நேரில் ஆய்வு செய்தோம். திட்டங்களை செயல்படுத்துவதால் நீர்நிலைகளில் நீர் பரவல் பரப்பளவு குறையாது. சேமிப்புத்திறன் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்த விதித்த தடை உத்தரவு நீக்கப்படுகிறது. ஆனால் மக்கள் நலன் என்ற பெயரில் நீர்நிலைகளை அழிக்க முடியாது. மதுரை மண்டலத்தில் பல பெரிய நீர்நிலைகள் ஏற்கனவே காணாமல் போனதை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, நீர்நிலைகளுக்கு அருகில் அமைந்திருந்த நீதிமன்ற கட்டிடம் இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, இங்கு நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் இருக்கின்றன. அங்கு பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கண்மூடித்தனமாக கொட்டப்படுகின்றன. வடிகால் மற்றும் கழிவுநீரை ஆறுகளில் கலக்குகிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்கது.

மதுரை மாநகரில் கிருதுமால் நதி என்ற பெயரில் ஆறு ஓடியது. ஒரு காலத்தில் நதியாக இருந்தது, தற்போது குறுகிய வாய்க்கால் ஆக மாறியிருக்கிறது.. வைகையில் கூட சர்வீஸ் ரோடு அமைத்து அதன் அகலம் குறைக்கப்பட்டிருக்கிறது.

எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளின் முழு விவரங்களை கொண்ட இணையதளத்தை 6 மாதத்தில் தமிழ்நாடு அரசு தொடங்க வேண்டும். அதில் ஒவ்வொரு நீர்நிலையையும் (குளங்கள், ஏரிகள், ஆறுகள், கண்மாய்கள் போன்றவை உள்பட) தொடர்புடைய சர்வே எண், பகுதி, கிராமம், தாலுகா, மாவட்டம் என அனைத்து விவரங்களையும் கண்டிப்பாக அரசு பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அந்த இணையதளத்தில் உள்ள விவரங்கள் தவறானவை என்பது தெரிந்தால், தனிநபர் யார் வேண்டுமானாலும் இந்த நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம். அதன்பேரில் தவறான தரவுகளை பதிவேற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 1.1.2000-க்கு பிறகு நீர்நிலைகள் தொடர்பாக வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, நீர்நிலைகளை பழைய நிலைக்கு மீட்க வேண்டும். நீர்நிலைகளின் ஒருமைப்பாட்டை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்த வேண்டும்

நீர்நிலைகள் சமுதாயத்திற்கு சொந்தமானவை. தொழில்நுட்ப ரீதியாக அவை அரசாங்கத்துக்கு சொந்தமானவையாக இருக்கலாம். அவை இயற்கையின் கொடை என்பதால் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கிடைக்க வேண்டும். நீர்நிலைகள் கார்ப்பரேட் மயமாக்கப்பட்டதை நாம் பார்க்க முடிகிறது. நீர்நிலைகளின் தரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் பராமரிப்பது அதிகாரிகளின் கடமை" இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+