கல்லுமண்டையன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்! 12 ஆண்டுகள் போராடிய குருவம்மாள்! மனித உரிமை ஆணையம் அதிரடி
மதுரை: வெள்ளத்துரையால் கடந்த 2010ஆம் ஆண்டு மதுரையில் என்கவுண்டர் செய்யப்பட்ட முருகன் என்ற கல்லுமண்டையனின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கல்லுமண்டையன் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் ரூ.3 லட்சத்தை காவல்துறை அதிகாரி வெள்ளத்துரையிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் என அலையாய் அலைந்து திரிந்து இந்த தீர்ப்பை பெற்றிருக்கிறார் கல்லுமண்டையன் தாயார் குருவம்மாள்.
இது தொடர்பாக விவரம் வருமாறு;

கல்லுமண்டையன்
கவியரசு, முருகன் என்ற கல்லுமண்டையன் ஆகிய இருவரும் மதுரையில் இராமநாதபுரம் சாலை செக்போஸ்ட் அருகே, அப்போதைய காவல்துறை உதவி ஆணையாளர் வெள்ளதுரையால் கடந்த 16.02.2010 ஆம் தேதியன்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து கல்லுமண்டையனின் தாயார் குருவம்மாள் மனித உரிமை செயற்பாட்டக அமைப்பான, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிறுவனர் ஹென்றி திபேனிடம் இது குறித்து முறையிட்டு சட்ட உதவி கோரினார்.

12 ஆண்டுகளாக
இதனிடையே கடந்த 14.02.2010 அன்று நள்ளிரவில் வீடு புகுந்த சீருடை அணியாத 6 காவலர்கள், உன் மகன் எங்கே எனக் கேட்டு சித்ரவதை செய்ததோடு, வாய் கூசும் அளவிற்குக் கெட்ட வார்த்தைகளால் தன்னை திட்டியதாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் எழுத்துப்பூர்வ புகார் மனு அளித்திருந்தார். மேலும், மக்கள் காணிகாணிப்பகம் அமைப்பின் வழக்கறிஞர்கள் அளித்த சட்ட உதவிகளை கொண்டு 12 ஆண்டுகளாக நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் என மகனின் என்கவுண்டருக்கு நீதி கேட்டு நடந்தார் குருவம்மாள்.

சட்டப் போராட்டம்
இந்த சட்ட போராட்டப் பயணத்தில் முதல் நாளிலிருந்து தீர்ப்பு வந்த நாள் வரை மக்கள் கண்காணிப்பகம் குருவம்மாளுக்கு ஆதரவாக நின்று வருகிறது. தொடர்ச்சியான 12 ஆண்டு கால கடுமையான போராட்டத்திற்கு பின் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், வெள்ளத்துரையால் கடந்த 2010ஆம் ஆண்டு மதுரையில் என்கவுண்டர் செய்யப்பட்ட முருகன் என்ற கல்லுமண்டையனின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

வெள்ளத்துரை
கல்லுமண்டையன் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் ரூ.3 லட்சத்தை காவல்துறை அதிகாரி வெள்ளத்துரையிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையம் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல் சம்பவம் நடந்த போது சார்பு காவல் ஆய்வாளர்களாக இருந்த தென்னரசு, கணேசன் ஆகிய இருவரிடமும் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மனித உரிமைகள் ஆணையம்
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 12 ஆண்டுகளாக ஆஜராகி குருவம்மாளுக்காக வழக்கை சிறப்புடன் நடத்திய மூத்த வழக்கறிஞர் சின்னராசா தலைமையிலான வழக்கறிஞர்கள் பாண்டியராஜன், சதீஷ், ராஜ்குமார்,நாகேந்திரன், முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு மக்கள் கண்காணிப்பகம் மதுரையில் வைத்து பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications