ஹெச்.ராஜா மீதான வழக்கு விசாரணை.. அடுத்த மாதம் தொடங்குகிறது.. அரசு தரப்பு விளக்கம்
மதுரை: நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தி பேசிய வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ராஜா மீது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஹெச்.ராஜா மீதான வழக்கு விசாரணை திருமயம் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்டம் திருமயம் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் H. ராஜா தலைமறைவு என குறிப்பிடப்பட்டுள்ளது.. தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின்போது மேடை அமைத்து பேசுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்போதைய பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா காவல்துறையை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இழிவான சொற்களில் விமர்சித்தார். அந்த விவகாரம் தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

வழக்கு விசாரணை
இந்நிலையில் திருமயம் காவல் நிலையம் விசாரித்த வழக்கில், விசாரணையை முடித்து விரைவில் ஹெச்.ராஜா மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்யபட்டது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2 மாதத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

நீதிமன்ற அவமதிப்பு
ஆனால் 3 வருடங்களுக்கு மேலாக காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் மேலும் மேலும் கால அவகாசம் கேட்டு நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

அடுத்த மாதம்
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி H. ராஜா மீது பதியப்பட்ட குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் திருமயம் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 23ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்..

காரைக்குடி
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி குற்றப்பத்திரிகையில் H. ராஜா தலைமறைவு என காண்பிக்கப்பட்டுள்ளது ஆனால் காரைக்குடியில் தான் உள்ளார் என தெரிவித்தார்.. இதனைத் தொடர்ந்து மனுதாரர்களின் குற்றச்சாட்டை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்..












Click it and Unblock the Notifications