"எங்க வாதத்தை கேட்டால் சர்க்கரை அதிகரித்துவிடும்னு நீதிபதி சுவாமிநாதன் சொன்னார்!" தர்கா தரப்பு வாதம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இன்று தர்கா தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. தர்கா தரப்பு வாதத்தைக் கேட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து விடும் எனத் தனி நீதிபதி நேரடியாகவே சொன்னதாகத் தர்கா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.

மேல்முறையீடு
முதலில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மலையின் மீது இருப்பது தீபத்தூண் இல்லை என்றும் அது தீபத்தூண் என்பதற்கு எந்தவொரு ஆதாரம் இல்லை என்று தமிழக அரசு வாதம் வைத்தது. அன்றைய தினம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்காத நீதிபதிகள், வழக்கு விசாரணையை இன்று திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர். இன்றைய தினம் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
ரத்த சர்க்கரை அளவு
அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தர்கா தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அப்போது தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கைத் தனி நீதிபதி அவசர அவசரமாக விசாரித்தார். தர்கா தரப்பு வாதங்களை காணொளி வாயிலாகக் கேட்க மறுத்துவிட்டார். நாங்கள் விளக்கம் தர வாய்ப்பைத் தனி நீதிபதி தரவில்லை. 'தர்கா தரப்பைக் கேட்டால் என் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்து விடும். எனவே இன்று கேட்கப் போவதில்லை' என்று அவர் நேரடியாகவே சொன்னார். வழக்கு விசாரணையின்போது எந்தவொரு கட்டத்திலும் எங்களின் தரப்பு விளக்கத்தைத் தனி நீதிபதி நிராகரித்தார்" என்றார்.
இணைப்பைத் துண்டித்தார்
மேலும் தர்கா தரப்பில், "இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எங்கள் தரப்பு வாதத்தைக் கேட்டார். ஆனால், அப்போதும் எங்கள் வாதங்களை முழுமையாகக் கேட்கவில்லை. பாதியிலேயே வீடியோ கால் இணைப்பைத் துண்டித்தார். இது எங்களை அவமதித்ததாக உணர்கிறோம். எங்கள் உரிமைகளை நிலைநாட்டப் போராட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது மட்டுமின்றி தனி நீதிபதி உத்தரவில் 'படையெடுப்பு', 'ஆக்கிரமிப்பு' போன்ற வார்த்தைகள் உள்ளன. அவை எங்களைப் பாதிக்கும் வகையில் இருக்கிறது. அந்த உத்தரவு ஏற்கத்தக்கது இல்லை" என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
கோயில் நிர்வாகம்
தொடர்ந்து கோயில் நிர்வாகம் தனது வாதங்களைத் தொடர்ந்தன. அதில் அவர்கள், "தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோயில் நிர்வாகத்திற்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது. கோயில் நிர்வாகத்தில் உயர்நீதிமன்றத்தால் நேரடியாகத் தலையிட முடியாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது.. இருப்பினும், அந்த தீர்புகளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
திருப்பரங்குன்றத்தில் 100+ ஆண்டுகளாகவே உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீபத்தூணில்தான் ஆகம விதிப்படி தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.. கோயில் பழக்க வழக்கங்களை மாற்றத் தனிநபருக்கு உரிமை இல்லை. எனவே, கோவில் நிர்வாகத்தில் அல்லது வழிபாட்டு முறைகளில் தனிநபர் வழக்கு தொடுத்து உரிமை கோர முடியாது. இந்த விவகாரத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு 10 நாட்களில் எப்படித் தீர்ப்பு வழங்கப்பட்டது?" என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications