திருப்பரங்குன்றம் முழு மலையும் முருகனுக்குத்தான் சொந்தம்.. மதுரையில் சொன்ன எச் ராஜா
மதுரை: திருப்பரங்குன்றம் முழு மலையும் முருகனுக்குத்தான் சொந்தம் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக அங்கே ஆட்சி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து காரைக்குடி செல்வதற்காக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அங்கே பெருபான்மையோடு ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சியினுடைய ஊழல், நகர் முழுவதும் அசுத்தமாக, பராமரிக்கப்படாத, மோசமான ஆட்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால் இம்முறை மத்தியில் பாஜக அரசாங்கத்தின் சாதனைக்கு அங்கு நல்ல பலன் அளிக்கும் சூழல் உள்ளது.
பழனியில் முருகனுக்கு மாநாடு நடத்தி சனாதன ஹிந்து தர்மத்தை மலேரியா கொசு மாதிரி அடிக்க வேண்டும் என்று சொன்ன நபருக்கு மகுடம் சூட்டுவதற்காக நடந்தது என்று தெளிவாகத் தெரிகிறது.
ஆங்கிலேய தீர்ப்புப்படி முழு மலையும் முருகனுக்கு சொந்தம் என்று சொல்லி இருக்கிறார்கள். மத நல்லிணக்கம் என்பதெல்லாம் எப்போது வருகிறது. சிக்கந்தர் என்பவர் எப்படி மலையில் இறந்தார், எதற்கு மலைக்கு வந்தார், தர்கா வருவதற்கு முன்பாக அங்கு இருந்தது யார். காசி விஸ்வநாதர் கோவில் தானே இருந்தது. காசி விஸ்வநாதர் கோயிலை இடிப்பதற்காகத்தான் சிக்கந்தர் போனார் என்கிற கருத்து மக்களிடையே உள்ளது.
தமிழக அரசு இந்து விரோதக் கொள்கையை கைவிட வேண்டும். ஈவேராவின் பெயரை சொல்பவர்கள் தமிழை விரும்புவர்களாக இருக்க முடியாது. தமிழை சனியன், காட்டுமிராண்டி கூட்டம் என்று சொன்ன ஈவராவின் கூட்டம் தமிழ் பற்றாளர்களாக இருக்க முடியாது.
உதயநிதி ஸ்டாலின் "நான் கிறிஸ்தவன், அதில் பெருமைப்படுகிறேன்" என்று சொல்கிறார், சேகர் பாபு "அல்லேலூயா" என்றார். அயோத்தி பிரச்சினைக்கு பிறகு இந்து எழுச்சியால் யாரும் உத்தரப்பிரதேசத்தில் அதிகாரத்திற்கு வர முடியவில்லை. அந்த எழுச்சி தமிழகத்தில் வரும்.
144 தடை குறித்த கேள்விக்கு ராஜா கூறுகையில் நவாஸ்கனி வந்தபோது இந்த 144 இல்லை. அந்த இடம் ஸ்ரீ கந்தர் மலை தான். சிக்கந்தர் அங்கிருந்த கோவிலை இடிக்க போனதாகவும் அதனால் அங்கிருந்த முருக பக்தர்கள் அவரை தாக்கியதாகவும் கருத்து உள்ளது என்றார்.
பட்ஜெட் குறித்து கனிமொழி கூறியது குறித்த கேள்விக்கு ராஜா கூறுகையில் கனிமொழிக்கு அரசியல் சட்டம் தெரியுமா, பட்ஜெட் என்றால் என்ன தெரியுமா? ஏதாவது மாநிலத்திற்கு சிறப்பு திட்டம் இருந்தால் அதன் பெயர் வரலாம், பெயர் வரவில்லை என்பதற்காக ஒரு மாநிலத்திற்கு என்று பட்ஜெட்டை வைத்து பேச முடியுமா?
மதுரையை சேர்ந்த வீர தமிழச்சி நிர்மலா சீதாராமன் கடைசி பந்தில் சிக்சர் அடித்துள்ளார். அரசு ஊழியர்கள் உட்பட ஏழு லட்சத்தில் இருந்த வரி வரம்பை 12 லட்சம் வரை உயர்த்தி உள்ளார். உங்களுக்கும் ஓட்டு போட்ட மக்களுக்கும் இது சேரும் தானே. பட்ஜெட்டில் அறிவித்துள்ள பயன்களை பெறுபவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் தானே. தேச விரோத கும்பல் மத்திய பட்ஜெட்டை பற்றி இப்படித்தான் பேசுவார்கள் என எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications