தட்டி தூக்க போகுது தூத்துக்குடி! ஆசிய அளவில் பெரிதாக போகும் வஉசி துறைமுகம்! விறுவிறுப்பாகும் பணிகள்!
மதுரை: தூத்துக்குடி துறைமுகத்தில் மிகப்பெரிய கப்பல்களை கொண்டுவரும் வகையில் கடல் பாதையை 230 மீட்டர் நுழைவாயிலாக அகலப்படுத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அது முடிவடைந்ததும் ஆசிய அளவில் மிகப் பெரிய துறைமுகமாக தரம் உயர்த்தப்படும் எனவும், தூத்துக்குடி துறைமுகம் தான் நாட்டிலேயே முதல் பசுமை தயாரிப்பு துறைமுகமாக மாறவுள்ளது என தூத்துக்குடி துறைமுக குழு தலைவர் சுஷா ஆனந்த் குமார் புரோகித் கூறியுள்ளார்.
இந்திய கடற்சார் வார தினத்தை முன்னிட்டு மும்பையில் வரும் 27 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கடல் வர்த்தக இணைப்பு மற்றும் தொலைநோக்கு பார்வை கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதற்காக தூத்துக்குடி வஉசி சிதம்பரனார் துறைமுக குழும தலைவர் சுசானந்த் புரோகித் மதுரை பசுமலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய தூத்துக்குடி துறைமுக குழு தலைவர் சுஷா ஆனந்த் குமார் புரோகித்," தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல்வேறு திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மோட்டார் ஹார்பர் (வெளித் துறைமுகம்) இது வந்து விட்டால். இப்ப இருக்க டெபாசிட்டியை விட அதிகமான சரக்குகள் அதிகரிக்கும்.

தூத்துக்குடி துறைமுகம்
வரும், பிப்ரவரி மார்ச்சுக்குள் திறப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி கப்பல் வரும் பாதையை 230 மீட்டர் நுழைவு வாயில்களை அகலப்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனால் மிகப்பெரிய கப்பல்கள் வருவதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரும். அதுமட்டுமின்றி பசுமை திட்டத்திற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
பசுமை துறைமுகம்
தூத்துக்குடி துறைமுகம் தான் நாட்டிலேயே முதல் பசுமை தயாரிப்பு துறைமுகமாக மாறவுள்ளது. பசுமை மெத்தனால் எரிபொருள் நிரப்பும் வசதி அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்ததும் ஆசிய அளவில் மிகப் பெரிய துறைமுகமாக தரம் உயர்த்தப்படும். பசுமை எரிபொருள் கிடங்கு முதல்முறையாக தூத்துக்குடியில் மட்டும்தான் உள்ளது.
சூரிய மின்சாரம்
சூரிய மின் நிலையம், காற்றாலை உள்ளிட்டவை செயல்படுவதால் தூத்துக்குடி துறைமுகம் கார்பன் நியூட்ரல் போர்ட் என்ற இலக்கை கூடிய விரைவில் 2026 இல் அடைய உள்ளது. இந்திய கடற்சார் வாரம் வருகிற 27 முதல் 31 வரைக்கும் மும்பையில் நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். 500க்கும் மேற்பட்ட தொழில் தொடர்பான கண்காட்சி நடத்த உள்ளது.
ஆசிய துறைமுகம்
பசுபிக் கடல் வர்த்தகம் கடல் மாசுபடுதல் குறித்தும் இதில் விவாதிக்க உள்ளனர். கடல் சார்ந்த வர்த்தகம் எப்படி நவீனமாக படுத்துவது. பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு தூத்துக்குடி துறைமுகத்தை பசுமை துறைமுகமாக மாற்றப்பட உள்ளது. மார்ச் மாதம் முதல் கார்பன் இல்லாத துறைமுகத்திற்கான பணிகளை தொடங்கி உள்ளதாகவும்" துறைமுக குழும தலைவர் சுஸ்ஸானந்த் குமார் புரோகித் கூறினார்.












Click it and Unblock the Notifications