யுவராஜ் சிக்க காரணமான திருச்செங்கோடு மலை சிசிடிவி- கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாகும் வரை ஆயுள் சிறை!
மதுரை: தலித் சமூகத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை அனுபவிக்கப் போகும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் யுவராஜ் சிக்க காரணமே திருச்செங்கோடு மலை சிசிடிவி காட்சிதான்.
Recommended Video
சேலம் மாவட்டம் ஓமலூர் தலித் பட்டதாரியான கோகுல்ராஜ் 2015-ம் ஆண்டு ஜூன் 24-ல் பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டி பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார். அப்போது காதல் தோல்வியால் கோகுல்ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

விஷ்ணுபிரியா
ஆனால் கோகுல்ராஜுடன் திருச்செங்கோடு மலை கோவிலில் உடன் இருந்த இளம்பெண் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கோகுல்ராஜை யுவராஜ் உள்ளிட்டவர்கள் அழைத்துச் சென்றதாக புகாரில் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் 2016-ல் யுவராஜ் உள்ளிட்டோர் ஜாமீனில் விடுதலையாகினர். இந்த வழக்கு நடைபெற்ற காலத்தில் யுவராஜ் எகத்தாளமாக வீடியோக்கள் வெளியிட்டு பரப்பை ஏற்படுத்தினார். மேலும் இவ்வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

யுவராஜ் கும்பல்
சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஜாதி ஆணவத்துடன் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு இயங்கியவர் யுவராஜ். தமது ஜாதி பெண்கள் பிற ஜாதியை சேர்ந்த இளைஞர்கள் காதல் திருமணம் செய்தால் அந்த இளைஞர்களை படுகொலை செய்வது, அப்படியான கொலையாளிகளுக்கு அடைக்கலம் தருவது என சட்டத்தை கையில் எடுத்து கொண்டு செயல்பட்ட கும்பல்தான் யுவராஜ் கும்பல். கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிக்கியும் கூட யுவராஜுக்கு நீதித்துறை என்ன தண்டனை கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது.

யுவராஜ் கும்பலுக்கு தண்டனை
தற்போது யுவராஜுக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இதர குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் கருணை மனு உள்ளிட்ட எந்த சலுகையும் யுவராஜுக்கு கிடைக்காது.

சிக்க வைத்த சிசிடிவி
இதனிடையே யுவராஜுக்கு எதிராக வலிமையான ஆதாரமாக இருந்ததே திருச்செங்கோடு மலை சிசிடிவி காட்சிதான். கோகுல்ராஜும் இளம்பெண் ஒருவரும் திருச்செங்கோடு மலை கோவிலில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு சென்ற யுவராஜ் தலைமையிலான கும்பல் இளம்பெண்ணிடம் முகவரி கேட்கிறது. அதனடிப்படையில் தன்னுடைய ஜாதியை சேர்ந்தவர் என உறுதி செய்து கொள்கிறது யுவராஜ் கும்பல். பின்னர் கோகுல்ராஜிடம் விசாரிக்கிறது. அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என தெரியவருகிறது. இதனையடுத்தே கோகுல்ராஜை அழைத்துச் சென்று சித்ரவதை செய்து படுகொலை செய்து நாக்கை அறுத்தது. பின்னர் தலையை துண்டித்து சிதைத்தது. அவரது உடலை தண்டவாளத்தில் போட்டுவிட்டது. இதில் திருச்செங்கோடு மலைக்கு யுவராஜ் கும்பல் சென்ற சிசிடிவி காட்சியை கைப்பற்றி வலிமையான ஆதாரமாக நீதிமன்றத்தில் ஒப்படைத்தது மூத்த வழக்கறிஞர் மோகன் தலைமையிலான குழு. இந்த சிசிடிவி காட்சிகள்தான் யுவராஜ் கும்பலுக்கு இத்தனை கடும் தண்டனை கிடைக்க அடிப்படையாக இருந்தது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications