திருப்பரங்குன்றம் மலையேறி திடீர் தரிசனம் செய்த பாஜகவினர்-திமுக அரசுக்கு எச்சரிக்கை கொடுத்த எச்.ராஜா!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சி தர்கா தொடர்பாக சர்ச்சை நீடித்து வரும் நிலையில் இன்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் திடீரென மலையேறி மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த எச்.ராஜா, உத்தர பிரதேசத்தில் அயோத்தி, காசி, மதுரா போல் தமிழகத்தில் திருப்பரங்குன்றம் ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் வழிபாட்டுத்தலமாக மாறும் என தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா ஆகியவை உள்ளன. இந்த தர்காவில் சந்தனக் கூடு திருவிழாவை முன்னிட்டு ஆடு, கோழிகள் பலியிடப்படும். கடந்த வாரம் இதேபோல நடைபெற்ற நிகழ்வுக்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை வெடித்தது. இதனால் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கந்தூரி வழிபாட்டுக்கு போலீசார் தடை விதித்தனர்.

நவாஸ் கனி எம்பி கருத்து
தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்பி அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அங்கு தர்காவும், காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. தர்காவிற்கு அனைத்து மதத்தினரும் சென்று வருகிறார்கள் விரைவில் அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு கடந்த காலங்களில் இருந்தது போன்று மக்கள் சிரமம் இன்றி தர்காவிற்கு சென்று வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
திருப்பரங்குன்றம் மலையேறிய எச்.ராஜா
இந்த பின்னணியில் இன்று தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் வெற்றிவேல்- வீரவேல்; முருகனுக்கு அரோகரா என சரணகோஷங்களுடன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்றனர். அங்கு காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தனர்.

சிக்கந்தர் மலை அல்ல- ஶ்ரீ கந்தர் மலை
இதனைத் தொடர்ந்து எச்.ராஜா தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும். திருப்பரங்குன்றத்தில் வீற்றிருப்பது ஸ்ரீகந்தர் மலைதான் சிக்கந்தர் மலை அல்ல!
மத மோதலை தூண்ட முயற்சி
இன்று ஸ்ரீகந்தர் மலையை சிக்கந்தர் மலை என்று கூறி இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மத மோதலை தூண்ட முயற்சிப்பதை வாக்கு வங்கி அரசியலுக்காக அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இவர்கள் விளையாடுவது ஹிந்துக்களுக்கு எதிராக மட்டுமல்ல இறைவன் முருகனுக்கும் எதிராகத்தான்.

உ.பி. அயோத்தி போல தமிழகத்தின் திருப்பரங்குன்றம்
உத்தர பிரதேசத்தில் அயோத்தி, காசி, மதுரா போல் தமிழகத்தில் திருப்பரங்குன்றம் ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் வழிபாட்டுத்தலமாக மாறும். இந்து விரோத திராவிட மாடலுக்கு இறுதி அத்தியாயம் எழுதும் இடமாக திருப்பரங்குன்றம் மாறும். திருப்பரங்குன்றத்தில் இருந்து தமிழகத்திற்கு விடியல் தொடங்கட்டும். முருகப் பெருமானின் சூரசம்ஹாரம் 2026 ல் நடந்தே தீரும். ஒன்றுபட்டு வெல்லட்டும் ஹிந்து சக்தி! வீழட்டும் ஹிந்து விரோத திராவிட தீயசக்தி! இவ்வாறு எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!











Click it and Unblock the Notifications