திருப்பரங்குன்றம்: கோர்ட் உத்தரவு பிறப்பித்தும் அனுமதி மறுப்பது ஏன்? போலீஸ் தரப்பு சொல்வது என்ன?
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், திருப்பரங்குன்றத்தில் குவிந்த பாஜக மற்றும் இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். தீபம் ஏற்ற அனுமதி கிடையாது என கூறி போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
போலீசார் அனுமதி கிடையாது என சொன்ன பிறகும் அங்கு இருந்து கலைந்து செல்ல மறுத்ததால் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி பாஜக மற்றும் இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்றனர். ஆனால் தமிழக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த தமிழக அரசின் மனுவும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று இரவு 7.00 மணிக்குள் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். நாளை காலை 10 30 மணிக்குள் தீபம் ஏற்றியதற்கான வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டர்.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி பாஜக மற்றும் இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்றனர். ஆனால் தமிழக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி சாலையில் அமர்ந்து பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்களை கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.
அப்போது நயினார் நாகேந்திரனிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது,நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம் என்றும், அரசு மேல்முறையீடு செய்தால் அதற்கு நாங்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. மேல் முறையீடு செய்யட்டும். தற்போது கோர்ட் உத்தரவிட்டப்படி எங்களை மலையில் தீபம் ஏற்ற அனுமதியுங்கள் என்று தான் சொல்லி வருகிறோம். என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
எனினும் கலைந்து செல்லுங்கள் இல்லாவிடில் கைது ஆகுங்கள் என போலீசார் அறிவுறுத்திய நிலையில் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கு அமர்ந்து போராட்டம் செய்த பாஜக, இந்து அமைப்பினரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் அவர்களை அனுமதிக்கவில்லை என்பதற்கு போலீசார் விளக்கம் அளித்தனர்.போலீசார் கூறுகையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டியும், தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதனாலும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications