ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாரா மு.க.அழகிரி? உதயசூரியனுக்கு ஓட்டு போட வேண்டாம் என சொல்லி ஆடியோ ரிலீஸா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: சட்டசபை தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டாம் என தமது ஆதரவாளர்களை முன்னாள் மத்திய அமைச்சச்ர் மு.க. அழகிரி கேட்டுக் கொள்ளும் ஆடியோ வலம் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதன் உண்மை தன்மை உறுதியாகவில்லை.

சட்டசபை தேர்தலில் எங்களுடைய பங்களிப்பு இருக்கும் என பூடகமாக சொன்னவர் மு.க. அழகிரி. அதன்பிறகு மதுரையில் பல்லாயிரக்கணக்கில் தமது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் அவர்.

அழகிரி மவுனம்

அழகிரி மவுனம்

அத்துடன் சட்டசபை தேர்தல் தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் அதிகாரப்பூர்வமாக மு.க. அழகிரி வெளியிடவில்லை. இதனிடையே சென்னையில் முக்கியமான நபர் வீட்டில் அழகிரியை சமாதானப்படுத்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

திமுக தரப்பு சமாதானம்

திமுக தரப்பு சமாதானம்


இதன்பின்னர் பேட்டி ஒன்றில் மு.க. அழகிரியை என் அண்ணன் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். இது அப்படியே முரசொலியில் பிரசுரமானது. அதேபோல் கனிமொழியும் மு.க. அழகிரி குறித்து பாசிட்டிவ்வாகவே கருத்து கூறினார். இதன்பிறகு அழகிரி தரப்பில் எந்த ஒரு நெகட்டிவ் கருத்தும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை.

அழகிரி ஆடியோ வெளியிட்டாரா?

அழகிரி ஆடியோ வெளியிட்டாரா?

ஆனாலும் இலவு காத்த கிளிகளாக இருக்கும் அழகிரி ஆதரவாளர்கள் ஒரு சிலர் தேர்தல் நேரத்தில் எதையாவது கிளப்பிவிடுவோம் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரையை சேர்ந்த அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஒருவர், அண்ணன் வீட்டில் இருந்து ஒரு ஆடியோ வந்துள்ளது. அதில் உதயசூரியனுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என சொல்லி இருக்கிறார் என ஒரு தகவலைப் பரப்பி இருக்கிறார்.

ஆடியோ உண்மையா?

ஆடியோ உண்மையா?

இருப்பினும் அந்த சர்ச்சைக்குரிய அழகிரி ஆதரவாளரின் சமூக வலைதளப் பக்கத்தில் அப்படியான ஒரு ஆடியோ வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில் மாற்று கட்சியினருக்கு ஓட்டுப் போட சொல்லி இருக்கிறார் அண்ணன்.. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்று மட்டும் இடைவிடாமல் பதிவு செய்து வருகிறார். உக்கிரமான கோபத்தில் மு.க. அழகிரி திமுகவுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களையே நிறுத்திய வரலாறும் உண்டு.

அழகிரி கச்சேரி இல்லை?

அழகிரி கச்சேரி இல்லை?

ஆனால் திமுகவுக்கு வாழ்வா? சாவா? என்கிற தேர்தல் இது. அதனால் அழகிரியின் கச்சேரி இப்போதைக்கு எதுவும் இருக்காது என்கின்றனர் அவருக்கு மிக நெருக்கமான சிலர். எதுவாக இருந்தாலும் மு.க. அழகிரி என்னும் 'அ' அதிகாரப்பூர்வமாக வாய் திறந்தால் மட்டுமே நிஜம் என்பது மட்டும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+