அடேங்கப்பா.. இன்னா ஸ்பீடு... இப்பவே தேர்லுக்கான சுவர் விளம்பரத்தில் படுதீவிரமான மதுரை பாஜக
மதுரை: தமிழக சட்டசபைக்கான தேர்தல் களத்தில் தற்போதைய நிலையில் பாரதிய ஜனதா கட்சிதான் படுவேகமாக இருக்கிறது போல.. மதுரையில் சட்டசபை தேர்தலுக்கான சுவர் எழுத்துகளில் பாஜக படுதீவிரமாக இறங்கியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான அடிப்படை வேலைகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இருக்கின்றன.

கூட்டணி பேச்சுவார்த்தைகள்
கட்சி கட்டமைப்புகளில் அதிமுக, திமுக மாற்றங்களை செய்து வருகின்றன. இந்த இரு கட்சிகளின் தலைமையில் அணிவகுக்கும் கட்சிகள், கூட்டணிக்கான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகளை அரசல் புரசலாக தொடங்கியும் இருக்கின்றன.

கட்சிகளிடையே மல்லு கட்டு
அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம் என பாஜக சொல்கிறது; ஆனால் அதிமுக அரசை மிக கடுமையாக பாஜக விமர்சிக்கிறது; பாஜகவுக்கு அதிமுகவும் சரியான பதிலடி கொடுத்து வருகிறது. இன்னொரு பக்கம் தேமுதிகவை திமுக இழுக்கப் போவதாக செய்திகள் வலம் வருகிறது. ஆனால் தேமுதிக இளைஞரணித் தலைவர் சுதீஷ் ஒரு கார்ட்டூன் போட்டு இந்த யூகங்களுக்கு வேட்டு வைத்தார்.

பாஜகவின் தேர்தல் பணி
இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி கூட்டணியைப் பற்றி எல்லாம் எந்த கவலையும்படாமல் அடுத்தடுத்த தேர்தல் பணிகளில் தீவிரமாக உள்ளது. தமிழக பாஜக இன்று தமது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளது.

சுவர் எழுத்து பிரசாரம்
மதுரையில் 2021 சட்டசபை தேர்தலுக்கான சுவர் எழுத்துகள் எழுதும் பணி நடைபெறுது அந்த வீடியோவில் உள்ளது. அந்த சுவரெழுத்தில் வேட்பாளர் பெயர் மட்டும்தான் பாக்கி.. வேட்பாளரை அறிவித்த உடனே பிரசாரத்தை தொடங்கிவிடும் வகையில் படுவேகமாக முன்தயாரிப்புகளில் பாஜக இப்போதே இறங்கிவிட்டது.
-
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications