3 கிளஸ்டர்கள்.. ஆணை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.. 1,391 கோடி கடன் வழங்குவதாக வங்கிகள் உறுதி!
மதுரை : மதுரையில் நடக்கும் MSME தென் மண்டல மாநாட்டில் தமிழ்நாட்டில் மூன்று மைக்ரோ கிளஸ்டர்களை அமைப்பதற்கான ஆணைகளை வெளியிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 13 வங்கிகள் சுமார் 1,391 கோடி ரூபாய் கடன் வரம்புடன் TN TReDS திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளன.
இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு மாத காலத்தில் TN CGS திட்டத்தின் கீழ் 81 எம்.எஸ்.எம் நிறுவனங்களுக்கு லட்சம் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

தொழில் நிறுவனங்கள் மாநாடு
தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற தென்மண்டல அளவிலான மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

1391 கோடி கடன்
இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின், TAICO வங்கியின் Flu கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோருக்கு கடன்களை வழங்கினார். இந்த FLY கடன் திட்டமானது, சிட்கோ தொழிற்பேட்டைகளில் ஒதுக்கீடு பெற்றதன் அடிப்படையில் தொழில்முனைவோருக்கு கடன்களை வழங்குகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், 13 வங்கிகள் TN TReDS-ஐ செயல்படுத்தும் வகையில் ரூபாய் 1,391 கோடி கடன்களை அறிவித்துள்ளன.

மைக்ரோ கிளஸ்டர்
தமிழ்நாட்டில் மூன்று மைக்ரோ கிளஸ்டர்களை அமைப்பதற்கான ஆணைகளை வெளியிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
1. டாய்ஸ் கிளஸ்டர், விளாச்சேரி, மதுரை
2.தூத்துக்குடியில் ஹியாசிந்த் எனும் நீர்தாமரை கிளஸ்டர்
3. பெண்கள் நெசவு கிளஸ்டர், ராஜபாளையம், விருதுநகர்
ஆகிய கிளஸ்டர் திட்டங்களை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

சிட்கோ
கரூர் மாவட்டம் புஞ்சைக்களக்குறிச்சி, ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த சிட்கோ கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். மேலும், மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.600 கோடி மதிப்பில் 5 ஏக்கரில் பூங்கா அமைக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஒரே மாதத்தில்
இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், குறு - சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் எளிதில் பெரும் வகையில் டி.என்.சி.ஜி.எஸ் என்கிற திட்டத்தை கடந்த மாதம் தொடங்கி வைத்தேன். இந்த ஒரு மாத காலத்தில் இத்திட்டத்தின் கீழ் 81 எம்.எஸ்.எம் நிறுவனங்களுக்கு லட்சம் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

1 ட்ரில்லியன் பொருளாதாரம்
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தொழில் முனைவோருக்கு வங்கிகள் கடன் வழங்கி தமிழகத்தின் சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். 2030க்குள் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைக்க தொழில் வளர்ச்சியை எட்ட ஊக்குவிக்கிறோம். எளிதாக தொழில் துவங்கும் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த தமிழகம் 3வது இடத்திற்கு முன்னேற வேண்டும்." என தொழில் நிறுவனங்களை கேட்டுக்கொண்டார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications