தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு மதுரை உயர் நீதிமன்றம் திடீர் சம்மன்.. என்ன காரணம்
மதுரை: தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த இறையன்பு ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா ஜூன் 29 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். தலைமை செயலாளராக பதவியேற்றது முதல் சிறப்பாக பல்வேறு பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தான் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆஜராகுமாறு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவின் வழங்கு விவரங்கள் பின்வருமாறு:

தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் அய்யனார் முருகன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றினேன். என் மீதான புகாரின் பேரில் என்னை சஸ்பெண்ட் செய்தனர். இதை எதிர்த்து 2016-ம் ஆண்டில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
இதை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை , என் மீதான நடவடிக்கையை ரத்து செய்ததோடு நான் பணியாற்றாத நாட்களுக்கு 25 சதவீத சம்பளத்தை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அரசு தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த அப்பீல் மனு ஏற்கப்படவில்லை. ஆனாலும் அதன் பின்பும் நீதிமன்றம் அளித்த அந்த உத்தரவை அதிகாரிகள் முழுமையாக செயல்படுத்தவில்லை.
இதனால் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்து 2020 ஆம் ஆண்டில் நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் அந்த உத்தரவை முழுமையாக செயல்படுத்தாதால் மனுதாரர் இந்த கோர்ட் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் எதிர்மனுதாரராக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆனால், அவரது தரப்பில் தற்போது வரை பதில் அளிக்கப்படவில்லை. இது விசித்திரமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதற்கு இதுதான் உதாரணம். இதற்கு இடையில், கடந்த 17 ஆம் தேதி மனுதாரர் சம்பந்தப்பட்ட உத்தரவை நிறைவேற்றியதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் பெயரில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிர் மனுதாரராக இல்லாத டாக்டர் கார்த்திகேயன் பெயரில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இது குறித்து விசாரித்த போது, இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட சிவ்தாஸ் மீனா, தற்போது தமிழக அரசின் தலைமை செயலாளராக உள்ளார். அதனால் அவரது சார்பில் தற்போதைய நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் இந்த அறிக்கையை தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பொறுத்தவரை யார் எதிர்மனு தாரராக உள்ளார்களோ அவர்கள் தான் பொறுப்பாக இருக்க முடியும். அவர்கள் தரப்பில் வேறு அதிகாரிகள் பதில் அளிக்க முடியாது. 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியிருக்கிறார்கள்.
எனவே, நகராட்சி நிர்வாகத்துறையின் முதன்மை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, நீதிமன்ற உத்தரவை அவமதித்து உள்ளார் என்பது தெளிவாகிறது. எனவே, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின்போது அவர் நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்டு மாதம் 21-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications