மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!
மதுரை: மதுரை அதிமுகவின் முக்கிய நிர்வாகியான மருத்துவர் சரவணனுக்கு சீட் கொடுக்க வாய்ப்பில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. அதிமுக சார்பாக லோக் சபா தேர்தலில் போட்டியிட்ட சரவணன், இம்முறை மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட தயாராகி வந்தார். ஆனால் மதுரை வடக்கு தொகுதியில் கூட்டணி கட்சியான தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் திருமாறனுக்கு சீட் ஒதுக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மதிமுக, திமுக, பாஜக என்று பல்வேறு கட்சிகளில் செயல்பட்டு தற்போது அதிமுகவில் இருப்பவர் மருத்துவர் சரவணன். அமைச்சராகிவிட வேண்டும் என்ற கனவுடன் வலம் வரும் மருத்துவர் சரவணன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நின்று திமுக சார்பாக எம்எல்ஏ ஆகினார். அதன்பின் 2021 சட்டசபைத் தேர்தலில் மருத்துவர் சரவணனுக்கு சீட் கொடுக்க கூடாது என்று திமுக தலைமையிடம் காய் நகர்த்தினர்.

திமுக சீனியர் மூர்த்தி, மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோருடன் சுமூகமாக செல்லாததால், திமுக தலைமையும் மருத்துவர் சரவணனுக்கு சீட் வழங்க வேண்டாம் என்று முடிவெடுத்தது. இதனை முன்கூட்டியே அறிந்து கொண்ட சரவணன், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதற்கு முன்பாகவே பாஜகவில் இணைந்து மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். அதில் மருத்துவர் சரவணன் தோல்வி அடைந்தார்.
இதன்பின் மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய குற்றச்சாட்டில் மருத்துவர் சரவணன் சிக்கினார். இதையடுத்து பாஜகவில் இருந்து விலகிய சரவணன், பின்னர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமானார். இதனைத் தொடர்ந்து லோக்சபா தேர்தலில் மதுரையில் போட்டியிட அதிமுகவில் யாரும் ஆர்வம் காட்டவில்லை.
தோல்வி உறுதி என்ற நிலையிலும் மருத்துவர் சரவணன் லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்காக போட்டியிட்டார். 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட சரவணன், அடுத்த மாதம் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் மீண்டும் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட மருத்துவர் சரவணன் காய் நகர்த்தி வந்தார். மதுரையில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்ட போதும், பெரிய அளவில் சரவணன் பொருட்களை செலவு செய்திருந்தார்.
திரும்பும் திசையெங்கும் பேனர், கட் அவுட் என்று சரவணன் அமர்க்களப்படுத்தினார். அப்போது மதுரை வடக்கு தொகுதியை சரவணனுக்கு கொடுக்க எடப்பாடி பழனிசாமியும் சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் பாஜக மூலமாக தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி கூட்டணிக்கு வந்துள்ளது. இதனால் அக்கட்சியின் திருமாறன் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார்.
இன்னொரு பக்கம் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகிய மூவரும் சரவணனுக்கு எதிராக செயல்படுவதாகவும் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை தவிர்த்து வேறு எந்த தொகுதியிலும் மருத்துவர் சரவணனால் ஈடு கொடுக்க முடியாது என்பதை நன்கு அறிந்து, மூவர் கூட்டணி காய் நகர்த்தி வருகிறது.
இதனால் கூட்டணியை காரணம் காட்டி மருத்துவர் சரவணனுக்கு சீட் மறுக்கப்படும் சூழல் உருவாகி இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை மருத்துவர் சரவணனுக்கு அதிமுக சார்பாக சீட் கொடுக்கப்படவில்லை என்றால், அவர் தவெகவில் இணையும் முடிவில் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு கட்சிக்கு செல்வதை மருத்துவர் சரவணன் ஸ்டைலாக வைத்துள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன.
-
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி!












Click it and Unblock the Notifications