இ.பி.எஸ்.க்கு தான் அதிக ஆதரவு.. புள்ளி விவரத்தை பாருங்க புரியும்.. சொல்கிறார் ஆர் பி உதயகுமார்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுகவிற்கும், அதிமுகவிற்கு வெறும் 3% வாக்குகள் வித்தியாசம் தான் இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார். இது தொடர்பாக மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

நாணயத்தின் இரு பக்கமாக எதிர்க்கட்சி ஆளும் கட்சியும் உள்ளது நீங்கள் ஆட்சியில் இருந்தால் நாங்கள் எதிர்க்கட்சி நாங்கள் ஆளுங்கட்சி இருந்தால் நீங்கள் எதிர்க்கட்சி.

எம்.ஜி.ஆர் தொடங்கிய இந்த இயக்கத்தை அளிக்க ஒருவர் அ.ம.மு.க கட்சி தொடங்கி தம்பி வா என்று அனைவரும் அழைத்தார் ஆனால் இன்றைக்கு அந்த கட்சி விலாசம் இழந்து போய்உள்ளது.ஜெயலலிதா இல்லாத சட்டமன்ற தேர்தலை நாம் சந்தித்துள்ளோம்.

 3% வித்தியாசம்

3% வித்தியாசம்

ஆனால் இந்த தேர்தலில் அதிமுகவிற்கு 1,43,85,410 மக்கள் வாக்களித்தார்கள் திமுக பெற்ற வாக்குகள் 1,56,85,421 ஆகும் நமக்கும் திமுகவிற்கும் வெறும் 3% வித்தியாசம் என்று கூறப்பட்டுள்ளது 3% என்பது சில இடங்களில் திமுக கூடுதல் வாக்குகளை பெற்று தான் குறிப்பிட்டுள்ளனர் மேலும் 43 தொகுதிகளில் 1,98,500 வாக்குகளைப் பெற்று இருந்தால் இன்றைக்கு நாம் ஆட்சி அமர்ந்திருப்போம் நாம் தோற்கவில்லை வெற்றியை நழுவ விட்டு விடுவோம்.

வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது

வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது

1,43,85,421 மக்கள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என்று வாக்களித்துள்ளார்கள். அதுமட்டுமல்லாது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வாக்கு சதவீதம் 32.76. சதவீதம் அதிமுக பெற்ற வாக்கு சதவீதம் 18 .26 சதவீதம் ஆகும் அதாவது திமுக பெற்ற வாக்கு 2.23 கோடி நாம் பெற்ற வாக்கு 1.28 கோடியாகும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காட்டிலும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வாக்குகள் குறைந்துள்ளது அதிமுகவின் வாக்கு சதவீதம் உயர்ந்து உள்ளது என்பதை புள்ளி விபரம் நமக்கு கூறி உள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு

முதலமைச்சர் வேட்பாளர் களத்தில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், தினகரன் உள்ளிட்டோர் பலர் இருந்தனர் இதில் முதலமைச்சர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை ஒப்பிடும்போது எடப்பாடி பழனிசாமி 90,802 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஆனால் ஸ்டாலினோ, 70,580 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள் என்று இதன் மூலம புள்ளி விபரம் நமக்கு கூறியுள்ளது.

மக்களை ஏமாற்றுகிறது

மக்களை ஏமாற்றுகிறது

திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள் ஆனால் உயர்மட்ட குழுவை அமைத்தார்கள் அதற்கு உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தில் நீங்கள் அனுமதி பெற்றுள்ளீர்களா என்று கேள்வி கேட்டனர் ஆனால் எடப்பாடி பழனிசாமி 7.5 இட ஒதுக்கீட்டினை செயல்படுத்தி அதன்மூலம் 435 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்க செய்தார் தற்போது அரசு மாணவர்களை ஏமாற்றுகிறது. இவ்வாறு ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+