சாத்தான்குளம் விவகாரம்- முதல்வரை பதவி விலக சொல்வதா? ஆ. ராசா மீது அமைச்சர் உதயகுமார் பாய்ச்சல்
மதுரை; சாத்தான்குளம் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திய திமுக முன்னாள் அமைச்சர் அ.ராசாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயகுமார்.
மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொரானாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பாதுகாப்பு அரண் அமைத்து பல்வேறு சீரிய நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார். முதல்வரின் நடவடிக்கையால் தான் தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மதுரையில் 21 முகாம்கள்
தமிழகத்தில் நோய் பரவலை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு தான் முக்கியம். ஜூலை மாதம் வரை மக்களுக்கு ரேஷன்பொருட்கள் வழங்க தாயுள்ளத்தோடு முதல்வர் உத்தரவு வழங்கியுள்ளார். மதுரையில் 21 தனிமைப்படுத்துதல் முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் கொரானாவுக்கு சிகிச்சையளிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனாவால் மரணம் கூடாது
தமிழக மக்களின் நம்பிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்று வருகிறார். மருந்தே இல்லையென்றாலும் கொரோனாவை தடுக்க போராடி வருகிறோம். மரணமே கூடாது- அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் உழைத்து வருகிறோம். சாத்தான்குளம் சம்பவம் வருந்தத்தக்கது வேதனையானது. அந்தச்சம்பவம் போல் இனி உலகத்தில் எங்கும் நடைபெறக்கூடாது.

ஆ. ராசா அதிமேதாவி
சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார். சாத்தான்குளம் சம்பவத்தில் முதல்வரை பதவியை விட்டு செல்லுங்கள் என அறிக்கை விட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, ஒரு வடிகட்டிய... அரசியல் நாகரீகம் கருதி சொல்லவில்லை. ஆ.ராசா தன்னை அதிமேதாவியாக நினைத்து கொண்டுள்ளார்.

ஆ ராசாவுக்கு தகுதி இல்லை
2 ஜி ஊழலில் நாடே சந்தி சிரித்தது. இந்தியாவில் தமிழகம் தலை குனிந்தது. முதல்வரை விமர்சிக்கும் தகுதி ஆ.ராசாவுக்கு இல்லை. சாத்தான் வேதம் ஓதுவது போலத்தான் ஆ.ராசா பேசுவது. எதற்கெடுத்தாலும் மாநில அரசு மீது நம்பிக்கையில்லை. சிபிஐ விசாரணை தான் தேவை என திமுக தான் கூறியுள்ளது. திமுக காணாமல் போனதற்கு காரணமே ஆ.ராசாவும் அவரது 2 ஜி ஊழலுமே காரணம். 2 ஜி ஊழலில் நாடே சந்தி சிரித்தது. இந்தியாவில் தமிழகம் தலை குனிந்தது. முதல்வரை விமர்சிக்கும் தகுதி ஆ.ராசாவுக்கு இல்லை. சாத்தான் வேதம் ஓதுவது போலத்தான் ஆ.ராசா பேசுவது. எதற்கெடுத்தாலும் மாநில அரசு மீது நம்பிக்கையில்லை. சிபிஐ விசாரணை தான் தேவை என திமுக தான் கூறியுள்ளது. திமுக காணாமல் போனதற்கு காரணமே ஆ.ராசாவும் அவரது 2 ஜி ஊழலுமே காரணம்.

திமுக இரட்டை வேடம்
ஆனால் தற்போது சிபிஐ விசாரணை தேவையில்லை என திமுக கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஆ.ராசா பெயரும் ராசா ஊரை கொள்ளையடிப்பதிலும் ராசா.. திகார் ராசா ஊழல் வழக்கில் சிறை சென்ற ராசா முதல்வரை பதவி விலக சொல்வது வேடிக்கையானது. தார்மீக உரிமையில்லை. தகுதியில்லை. சிபிஐ விசாரணை விவகாரத்தில் இரட்டைவேடம் போடுகிறது திமுக. இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications