ஆர்ப்பரித்து வரும் வைகை.. மாமதுரையே மிரளுதே! டவுனுக்குள்ள போறீங்களா? கொஞ்சம் கவனமா இருங்க மக்களே!
மதுரை: தேனி வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மழையும் பெய்து வருவதால் மதுரை வைகையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மதுரையில் இணைப்பு பாலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தேனியில் உற்பத்தியாகும் வைகை ஆறு ஐந்து மாவட்ட மக்களின் பாசன மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது.

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு கம்பம் போடி போடிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது.
வைகை அணை: அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் வைகை அணையிலிருந்து ஏற்கனவே மதுரை திண்டுக்கல் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் குடிநீர் தேவை மற்றும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் வைகை அணையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் போக பாசன தேவைக்காக நேற்று முதல் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு: இந்த நிலையில் வைகை ஆற்றங்கரை ஓர பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை மாநகர் வைகையாற்று பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து தண்ணீர் வர தொடங்கியுள்ளதோடு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி வரை மொத்தம் 915 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. வைகை அணையில் உள்ள 7 சிறிய மதகுகள் வழியாக ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
வெள்ளம்: தொடர்ந்து மதுரை மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தில் 3 நாட்களாக மழை பெய்து வருவதன் காரணமாக வரக்கூடிய மழை நீரும் வைகை ஆற்றில் கலந்து வருவதால் நீரின் வேகம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மதுரை மாவட்ட வைகை ஆற்று பகுதியில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஓட தொடங்கியுள்ளது. எனவே வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் ஆற்றில் இறங்கவும் குளிக்கவும் துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கு தடை: மேலும் கால்நடைகளை ஆற்றிற்குள் இறங்க அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிப்பால் யானைக்கல் தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்திற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். 3 தரைப்பாலங்கள் மற்றும் வைகை கரையோரம் உள்ள அணுகு சாலையின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றை ஒட்டி அமைந்துள்ள மீனாட்சி அரசு கல்லூரி சாலையின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications