தவெக தலைவர் விஜய் விஜயகாந்த் போல தாக்கத்தை ஏற்படுத்துவார்.. மதுரையில் டிடிவி தினகரன் பேட்டி
மதுரை: தவெக தலைவர் விஜய் மறைந்த விஜயகாந்த் போல அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார். விஜய் திமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார். ஏற்கனவே மக்கள் திமுக ஆட்சியில் குமுறிக் கொண்டுள்ளார்கள். ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே விஜய் அரசியல், என எல்லாமே இத்தேர்தலில் எதிரொலிக்கும் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறினார்.
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், தவெக தலைவர் விஜய் மறைந்த விஜயகாந்த் போல அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார். விஜய் திமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார். ஏற்கனவே மக்கள் திமுக ஆட்சியில் குமுறிக் கொண்டுள்ளார்கள். ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே விஜய் அரசியல், என எல்லாமே இத்தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்.

குற்ற வழக்குகள் உள்ளவர்கள் பயத்தால் சேர்ந்த கூட்டணி என முதல்வர் விமர்சனம் குறித்த கேள்விக்கு, "அக்யூஸ்ட் என்பதற்கும் குற்றவாளி என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் முதல்வர் பேசிக்கொண்டுள்ளார். ஊழல் லஞ்சம் திமுக ஆட்சியில் அதிகமாக நடைபெற்றுள்ளது. திராவிட மாடல் சீட்டிங் மாடல் என மாறிக்கொண்டுள்ளது. முதல்வர் தோல்வி பயத்தில் உள்ளார். எதேதோ பேசிக்கொண்டுள்ளார்" என்று தினகரன் கூறினார்.
அண்ணாமலை போட்டியிடாதது குறித்த கேள்விக்கு, "பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை என்னிடம் பேசிய போது நான் தேர்தலில் போட்டியிடவில்லை என கூறினார். என்டிஏ வேட்பாளர்களுக்கு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன் என கூறினார். நான் போட்டியிடாதது குறித்தும் பல கருத்துக்களை கூறினார்கள். தேர்தலில் போட்டியிடாதது அண்ணாமலையின் தனிப்பட்ட முடிவு. இதில் அழுத்தம் ஏதும் இருக்கும் என நினைக்கவில்லை. அண்ணாமலை குறித்து யூகங்கள் வதந்திகள் பெரிதாக்கப்படுகிறது. அது பொய்.
இன்றைக்கு அண்ணாமலை தான் கண்டன்ட்டா. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. பெண்குழந்தைகள் சீரழிக்கப்படுகிறார்கள். சட்டம் ஒழுங்கு மோசமாகி உள்ளது. நான் தேர்தலில் நிற்கவில்லை என்பதால் தொண்டர்கள் வருத்தப்பட்டார்கள். இருந்தாலும் என் முடிவு. தொண்டர்கள் ஏற்றுக்கொண்டார்கள்" என்று டிடிவி தினகரன் பேட்டியில் கூறினார்.
தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் அமைச்சர்கள் வாய்ப்பு குறித்த கேள்விக்கு, "அதிமுக ஆட்சி வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதிமுக தலைமையில் ஆட்சி வர வேண்டும் எங்கள் விருப்பம். தேசிய ஜனநாயக கூட்டணியில் நீங்கள் கூறுவது வர வேண்டும் என விரும்புவது இயற்கை. தேர்தலுக்கு பிறகு சுமூகமாக எல்லாம் மாறும்" என்றார்,
வெளிநாட்டு பங்களிப்பு சட்டம் பற்றிய கேள்விக்கு, அது பற்றி அச்சம் தேவையில்லை. நிதி எல்லாருக்கும் வருகிறது. சிறுபான்மை மக்கள் அச்சப்பட தேவையில்லை. பாஜகவை காட்டி சிறுபான்மையினர் வாக்குப்பெற திமுக செய்யும் பிரச்சாரம் இது. தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்திருந்தால் பாதிப்பு இருந்திருக்கும். தற்போது தவெகால் பாதிப்பு என்பது ஆளுங்கட்சிக்கே ஏற்படும். அதனால் தான் கூடுதல் தொகுதிகளில் திமுக நிற்கிறது. அதிமுக தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். சசிகலா ராமதாஸ் கூட்டணி எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அத்தி பூத்தது போல் அவர்கள் ஏதாவது ஒரு தொகுதியில் ஒட்டு வாங்கலாம் என்றும் தினகரன் பேட்டியின் போது கூறினார்.












Click it and Unblock the Notifications