Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரசிகர்களை தொண்டர்களாக மாற்ற தவறுகிறாரா விஜய்? தவெக மாநாட்டில் நடந்த அந்த சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் சுமார் 4 லட்சம் பேர் கலந்து கொண்டிருந்தாலும், மொத்தமாக 1 மணி நேரம் 38 நிமிடங்கள் மட்டுமே மாநாடு நடந்தது. விஜய் மேடையில் ஏறியதில் தொடங்கி விஜய் பேச்சு முடிவடைந்த பின் மாநாடு நிறைவடைந்தது. இதனால் தவெக மாநாடு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தனது ரசிகர்களை இன்னும் தொண்டர்களாக மாற்ற விஜய் தவறி வருவதாக கூறப்படுகிறது.

மதுரை பாரபத்தியில் நடந்த தவெக மாநாடு தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த மாநாட்டின் முகமாக விஜய் மட்டுமே இருந்தார். தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 4 லட்சம் தொண்டர்கள் தவெக மாநாட்டில் பங்கேற்றனர். 500 ஏக்கரில் தவெக தொண்டர்களுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், வெயில், தண்ணீர் பற்றாக்குறை, உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல் எழுந்தது.

TVK Madurai Maanadu

ஒரு கட்டத்தில் வெயிலை தாங்க முடியாமல் பலரும் மயக்கம் அடையத் தொடங்கினர். வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், மாநாடு 3 மணியளவில் தொடங்கப்பட்டது. சரியாக இந்த மாநாடு 1 மணி நேரம் 38 நிமிடங்கள் நடந்தது. இந்த மாநாட்டில் விஜயின் பேச்சிற்காக மட்டுமே தவெக தொண்டர்கள் காத்திருந்தனர். வேறு யாருடைய பேச்சையும் தவெக தொண்டர்கள் கண்டுகொள்ளவில்லை என்றே சொல்லலாம்.

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் உள்ளிட்டோரின் பேச்சுக்களுக்கு தவெக தொண்டர்கள் கொஞ்சம் கூட கவனம் கொடுக்கவில்லை. அப்போது கூட மேடையில் இருந்த விஜயை காண்பதற்கே அக்கட்சியினர் ஆர்வமாக இருந்தனர். இதன்பின் விஜய் பேச்சின் போது ஒட்டுமொத்த கூட்டமும் உற்சாகத்தின் உச்சியில் இருந்தது. குறிப்பாக திமுக மீதான விமர்சனங்களுக்கு மிகப்பெரிய ஆரவாரம் எழுந்தது என்றே சொல்லலாம்.

ஆனால் தவெக மீண்டும் மீண்டும் தவறு செய்தது மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் கூட இல்லாமல் நடத்தியதுதான் என்று பார்க்கப்படுகிறது. திமுக மற்றும் பாஜகவை மட்டும் கடுமையாக விமர்சித்தால் ஆட்சி மாற்றம் நடந்துவிடுமா என்ற கேள்வி அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் இருந்தது. அதேபோல் மாநாட்டுக்கு வந்தவர்கள் பலரின் முதல் நோக்கமாக விஜயை பார்க்க வேண்டும் என்பதாகவே இருந்தது.

இதன் மூலமாக விஜய் ரசிகர்கள் இன்னும் தொண்டர்களாக மாறவில்லை என்று பார்க்கப்படுகிறது. அதற்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பு ஒன்றை விஜய் கோட்டைவிட்டுள்ளார். மாநாட்டின் திடலுக்கு விஜய் 3 மணியளவில் வந்திருந்தாலும், காலை முதலே கூட்டம் இருக்கும் என்பதை தவெக தலைமையும் நன்றாகவே அறிந்திருந்தது. அதற்கேற்ப கருத்தரங்கு, பேச்சாளர்கள் மூலமாக கொள்கைகளை பேசி இருக்க வேண்டும்.

அதேபோல் கொள்கைத் தலைவர்களின் கோட்பாடுகளையும் ரசிகர்களின் மனதில் பதிய வைக்கும் வகையில் குறும்படங்கள், கருத்தரங்குகளை நடத்தி இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால் திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை இரண்டாம் கட்டத் தலைவர்கள் மூலமாக காலை முதலே பேசி இருந்திருக்கலாம். கடைசி வரை விஜய் முகத்தை மட்டுமே தவெக நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இறுதியாக ரேம்ப் வாக்கில் விஜய் நடந்தபின், ஒரு கூட்டம் மாநாட்டுத் திடலில் இருந்தே வெளியேறியது. மதுரை போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் மாநாடு நடத்திவிட்டு, அதனை 1.38 மணி நேரத்தில் முடிப்பது எதிர்க்கட்சியினருக்கே அதிர்ச்சியாகதான் இருந்திருக்கும். இதனால் அடுத்தடுத்த அரசியல் பயணத்தில் விஜய் சரி செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளமானவை இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+