மதுரையில் புதுமணப்பெண் கடத்தல் வழக்கில் ட்விஸ்ட்! காதலனுடன் செல்ல நாடகம் நடத்தியது அம்பலம்
மதுரை: மதுரை திருமங்கலம் அருகே புதுமணப்பெண் முன்னாள் காதலனால் கடத்தப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அந்த பெண்ணே தன்னை கடத்தச் சொல்லி நாடகம் ஆடியது விசாரணையில் தெரியவந்தது. காதலனுடன் செல்வதற்காக அந்த பெண் இந்த நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே விடத்தகுளம் கிராமத்தில் விஜய பிரகாஷ். இவருக்கும் சுவலட்சுமி என்பவருக்கும் கடந்த மாதம் 28ஆம் தேதி திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு விஜயபிரகாஷும் சுவலட்சுமியும் இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது விடத்தகுளம்- திருமங்கல் சாலையில் விஜய பிரகாஷின் பைக்கை காரில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் மடக்கினர். இதையடுத்து விஜயபிரகாஷ், ஏன் வழி மறிக்கிறீர்கள் என கேட்கும் போதே அந்த கும்பல், அவரை கடுமையாக தாக்கியது.
இதனால் அவர் நிலைக்குலைந்ததும் சுவலட்சுமியை சினிமா பாணியில் காரில் கடத்திச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் கடத்திச் சென்றது சுவலட்சுமியின் காதலன் ரமேஷ் என சொல்லப்பட்டது.
அவர்தான் காரில் நண்பர்களுடன் வந்து விஜய பிரகாஷை தாக்கிவிட்டு சுவலட்சுமியை கடத்தி சென்றார் என்பது தெரியவந்தது. இது குறித்து உறவினர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ரமேஷ் என்பவரை சுவலட்சுமி காதலித்து வந்ததாக தெரிகிறது.
இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இந்த பிரச்சினைகளை சமாளிக்க முடியாத சுவலட்சுமி, வீட்டில் பார்த்து வைத்த விஜய பிரகாஷை திருமணம் செய்து கொண்டார். எனினும் ரமேஷை மறக்க முடியாமல் தவித்து வந்தது தெரியவந்தது.
இதனால் தனது காதலன் ரமேஷுடன் செல்வதற்காகவே, தான் இரவு நேரத்தில் கணவருடன் செல்லும் போது கடத்திச் செல்லுமாறு ஐடியா கொடுத்துவிட்டு பின்னர் எதுவுமே தெரியாதது போல் நாடகமாடியுள்ளார்.
இந்த நிலையில் ரமேஷ், சுவலட்சுமி மற்றும் இரு நண்பர்கள் என 4 பேரையும் போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மாப்பிள்ளை வீட்டார் , பெண் வீட்டாரிடம் சண்டையிட்டு வருகிறார்கள். மேலும் மேகாலயாவை காதலனுக்காக கணவரை கொலை செய்த சோனம் போல் இந்த பெண்ணும் செய்திருந்தால் என்ன செய்வது என நினைத்து மாப்பிள்ளை வீட்டார் அச்சத்தில் உள்ளனர். மேலும் விருப்பமில்லாத பெண்ணை என் மகனுக்கு ஏன் திருமணம் செய்து வைத்தீர்கள். இதனால் என் மகனின் உயிருக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்ன நடந்திருக்கும் என கண்ணீர் விட்டபடி கேட்டுள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications