இந்த வயசுலயா? 8ஆம் வகுப்பிலேயே 5 மாத கர்ப்பம்! பெற்றோர் முன் சிறுமி செய்த செயல்! மிரண்டு போன மதுரை.!
மதுரை : மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 15 வயது சிறுமியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து 5 மாத கர்ப்பமாக்கிய இரண்டு முதியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஒருவரை கைது செய்ததோடு மற்றொருவரை தேடி வருகின்றனர்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
விருதுநகரில் தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வேலூரில் இளம் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை என அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ந்து போயுள்ளனர் போலீசார்.

பாலியல் வன்கொடுமை
குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருவதும் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்சியில் சிறுமி ஒருவர் வீட்டின் கழிவறையில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதற்கு காரணமான இரு முதியவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரையில் அதிர்ச்சி
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் பெற்றோர் கூலி வேலைக்கு சென்று விட சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டதாகவும், அடிக்கடி அவர் மயங்கி விழுந்து வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.

5 மாத கர்ப்பம்
சிறுமிக்கு வயிற்றில் ஏதோ கட்டி உருவாகி இருப்பதாக உள்ளூர் மருத்துவர் கூறிய நிலையில் நாட்கள் செல்ல சிறுமியின் வயிறு பெரிதாக தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அச்சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியதை அடுத்து அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளனர் பெற்றோர்.

அத்துமீறிய முதியவர்கள்
இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது கொரோனா காலத்தில் வீட்டில் தனியாக இருந்த தன்னை தன் வீட்டருகே வசிக்கும் முதியவரான பாலமுருகன் என்ற முருகேசன் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட அருகே வசிக்கும் ரமேஷ் என்பவர் தான் இது குறித்து வெளியே கூறி விடுவேன் என மிரட்டி பலமுறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஒருவர் கைது
கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக இந்த கொடுமை நடந்து வந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் எனவும் அந்த காமுகர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் இது குறித்து சிறுமி வெளியே சொல்லவில்லை. சிறுமி கர்ப்பாமான விவரம் வெளிவந்த பிறகு அவரது பெற்றோர் அவனியாபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பால பாலமுருகனை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் ரமேஷ் என்பவரை தேடி வருகின்றனர். 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications