அரசு மருத்துவமனையில் இருந்து.. பெண் உள்பட 2 கொரோனா நோயாளிகள் எஸ்கேப்.. சுகாதாரத்துறையினர் வலைவீச்சு
மதுரை: தோப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் உள்பட 2 பேர் தப்பியோடி விட்டனர். அவர்களை சுகாதாரத்துறையினர் தேடிவருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது வரை 88 ஆண்கள், 51 பெண்கள் உட்பட 139 பேர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 ஆண்கள், 7 பெண்கள் உட்பட 17 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஏற்கனவே தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் 10 ஆண்கள், 6 பெண்கள் உட்பட 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது 139 பேர் சிகிச்சை பெற்று வரக்கூடிய மருத்துவமனை வளாகத்தில் ஒரு பெண் உடள்பட இருவர் தப்பியோடியுள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை நிர்வாகம் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தப்பிச்சென்ற நபர்கள் யார்? அவர்கள் எந்தப் பகுதியை சேர்ந்தவர்கள்? அவர்கள் எப்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்? என்று விவரப் பட்டியலை சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தப்பிச்சென்ற நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications