கிடுகிடுவென உயர்ந்த வைகை அணையின் நீர் மட்டம்! 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மதுரை: இடுக்கி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பியுள்ளது. எனவே 5 மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில், வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இன்று காலை வரை அணைக்கு நீர்வரத்து 12,500 கன அடியாக இருந்தது. ஆனால் இன்று மதியம் திடீரென நீர்வரத்து 20,000 கனஅடியாக அதிகரித்தது. இந்த அணை 111 அடி உயரம் கொண்டது. இருப்பினும் 71 அடி வரை மட்டுமே நீரை தேக்கி வைக்க முடியும். தற்போது நீர்மட்டம் 66 அடியை எட்டியிருக்கிறது. எனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அணையின் நீர்மட்டம் 68.5 அடியாக எட்டியதும் இரண்டாம் கட்ட எச்சரிக்கை கொடுக்கப்படும். 69 அடியை எட்டும் போது 3ம் கட்ட எச்சரிக்கையும், 71 அடியை எட்டும் போது உபரி நீர் முழுவதும் திறந்து விடப்படும்.
ஏற்கெனவே முல்லை பெரியார் அணையிலிருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுவதாலும், தேனியின் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகவும் தேனியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்திருக்கிறது. இந்நிலையில், வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. வைகை அணையை பொறுத்தவரை நாளை காலைக்குள் அணை முழு கொள்ளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications