உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை.. தமிழக அரசுக்கு முடிவு கட்ட வந்துள்ளேன்- வைகோ

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Vaiko Campaign: தமிழக அரசுக்கு முடிவு கட்ட வந்துள்ளேன்- வைகோ பிரச்சாரம்- வீடியோ

    திருப்பரங்குன்றம்: உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை. இந்த தமிழக அரசுக்கு முடிவு கட்ட வந்துள்ளேன் என மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார்.

    மதுரை, திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து, மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பரப்புரை மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில் 23ம் தேதி வாக்குப்பதிவு எண்ணப்பட்ட பிறகு இவர் உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்.

    திருப்பரங்குன்றம் குமரனின் படை வீடுகளில் ஒன்று, ஆனால் தேர்தல் முடிவுக்கு பிறகு அது திமுகவின் படைவீடாக மாறிவிடும்.

    கைரேகை

    கைரேகை

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அங்கீகாரம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் கையொப்பமிட வேண்டும். ஆனால் கைரேகை வைக்க சட்டத்தில் இடம் உள்ளதா என தெரியவில்லை.

    ஆனால் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் போஸ் வேட்பு மனுவில் ஜெயலலிதாவின் கைரேகை முறைகேடானது என வழக்கு போட்டு, நீதியை நிலைநாட்ட தொடர்ந்து போராடியவர் நமது வேட்பாளர் சரவணன்.

    கைரேகை

    கைரேகை

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அங்கீகாரம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் கையொப்பமிட வேண்டும். ஆனால் கைரேகை வைக்க சட்டத்தில் இடம் உள்ளதா என தெரியவில்லை.

    ஆனால் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் போஸ் வேட்பு மனுவில் ஜெயலலிதாவின் கைரேகை முறைகேடானது என வழக்கு போட்டு, நீதியை நிலைநாட்ட தொடர்ந்து போராடியவர் நமது வேட்பாளர் சரவணன்.

    வேலைவாய்ப்பு

    வேலைவாய்ப்பு

    இந்த ஒரு தகுதி போதும். இங்கு பல இடங்களில் நீர் நிலைகள் தூர்வாரப்படவில்லை.

    அதே போல் வைகையாற்றில் இருந்து இங்கு தண்ணீர் கிடைக்க தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு
    வருகிறது. தமிழகத்தில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலையில், வட மாநிலத்தை சேர்ந்த பல ஆயிரம் இளைஞர்கள் இரயில்வே, அஞ்சலகத் துறை என பல பணிகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

    தள்ளுபடி

    தள்ளுபடி

    அதே போல் தமிழகத்திற்கு வர வேண்டிய ஹோண்டா கம்பெனி உட்பட பல தொழிற்சாலைகள் நாட்டில் பல மாநிலங்களுக்கு சென்றுள்ளது...

    தற்போது ஊழல் ஆட்சியாக எடப்பாடி அரசு உள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வரும்,

    ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தவுடன் கல்வி, விவசாயம், மற்றும் நகைக்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

    பிரதமராக வர

    பிரதமராக வர

    ஒருவேளை மீண்டும் வந்தால் இந்த திட்டங்கள் செயல்படும். ஊழல், துரோகம் மற்றும் மோடிக்கு காவடி தூக்கும் அரசாக எடப்பாடி அரசு உள்ளது.
    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 13 பேரை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொன்ற அரசு இந்த அரசு.

    ஈவு இரக்கம்

    ஈவு இரக்கம்

    ஒருவேளை மீண்டும் வந்தால் இந்த திட்டங்கள் செயல்படும்.

    ஊழல், துரோகம் மற்றும் மோடிக்கு காவடி தூக்கும் அரசாக எடப்பாடி அரசு உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போரடிய 13 பேரை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொண்ற அரசு இந்த அரசு.

    முடிவு கட்ட

    முடிவு கட்ட

    விவசாயிகள் வாழ முடியாமல் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.. .

    சேவை வரியை கொண்டு வந்து, வியாபாரிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றியது மோடிஅரசு. உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை, இந்த அரசுக்கு முடிவு கட்ட கேட்டு வந்துள்ளேன் என அப்போது வைகோ பேசினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+