அரசு ஹாஸ்டலில் மாட்டுக்கறி.. மாணவர்கள் தான் கேட்டாங்க! சனாதன கும்பலின் விஷமம்.. வன்னியரசு காட்டம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: சமூக நீதி விடுதிகளில் மாட்டுக்கறி போட வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கை. மாட்டுக் கறி தான் போட வேண்டுமென நானும் சொல்லவில்லை. ஆனால், இதனை சில கும்பல் திரித்து விஷம பிரச்சாரம் பண்ணுகின்றனர். இதற்கு பின் சனாதான கும்பல் உள்ளது என அமைச்சர் வன்னியரசு குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியில் வசிக்கும் 112 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவினை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

Vanniarasu vck tvk

அப்போது பேசிய அவர்," தமிழகம் முழுவதும் மனைப்பட்டா வழங்கிவருகிறோம். தீர்த்தகாட்டில் 40 ஆண்டுகால பிரச்சனைகள் , போராட்டத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திருமா அவர்கள் இந்த போராட்டத்திற்கு முக்கியத்துவமானவர். மதுரை மாவட்ட விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் தான் பட்டா கிடைத்துள்ளது.

வன்னியரசு

தமிழகம் முழுவதும் இது போன்ற பிரச்சனைகள் உள்ளது. ரசீது இருக்குது.. கிணத்தை காணோம் என்பது போல பட்டா இருக்கின்றது. ஆனால் இடத்தை காணோம். 80 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பின் மனை பட்டா இல்லாமல் பூர்வகுடிகள் இருப்பது மண்ணின் அவமானம். கோரிக்கை வைத்த இடத்தில் இருந்து இப்போது செயல்படுத்தும் இடத்தில் உள்ளோம்.

தவெகவின் நல்லாட்சி்

தமிழ்நாட்டில் நல்லாட்சி் நடைபெறுகிறது என்பது ஒரு சாட்சிதான் இது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை அனைத்து காலகட்டத்திலும் உள்ளது தான். மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் போராட்டம் நடத்திய இயக்கம் விசிக. கவின்படுகொலை விவகாரத்தில் எங்களின் கருத்துகளை நேரடியாக பேசுகிறோம்
போராட்டங்களை நடத்துகிறோம். அது தான் சுதந்திரம்.

முதலமைச்சர் விஜய்

கடந்த காலங்களில் நடக்காத செயல்திட்டங்களை செயல்படுத்துகிறோம். நாங்கள் வந்து 3 மாதம் தான் ஆகிறது. அது பிடிக்கவில்லையா? இடைத்தேர்தல் தொகுதிகளில் மட்டுமே முதலமைச்சர் விஜய் செல்கிறார் என்கின்றனர். முதல்வருக்கு பின் எதிர்கட்சியினர் செல்வர். மாணவர்களுக்கு மொட்டை அடிக்க வேண்டுமென பேசியது தொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரி என்னிடம் பேசினார். ஒரு தாயாக பேசியிருப்பதாக கூறியிருக்கிறார்.

தவெக அரசு

நூற்றாண்டு சமூக கட்டமைப்பு சாதியவாத்த்தை ,சனாதானத்தை வலிமையாக்கும் அரசு் பாஜக அரசு, அதனை உடைத்து போராடுவது சாதரமானது அல்ல; ஒப்பீடு சரியா வராது. சேர்ந்து போராடும் போது வன்கொடுமைகள் குறையும். தவெக அரசு வந்தே மாதரம் பாஜக அரசு பாட சொன்னபோது தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என தீர்மானம் இயற்றிய அரசு தவெக அரசு மற்ற மாநிலங்கள் யோசித்தபோது தவெக அரசு செய்த்து. வக்பு வாரிய திருத்த சட்டம், CAAஆகியவற்றிக்கு எதிராக துணிச்சலோடு தீர்மானம் நிறைவேற்றியது தமிழக அரசு .

மாட்டுக்கறி உணவு

டெல்லியில் நடைபெற்ற SIRக்கு எதிரான போராட்டத்தில் தவெக பங்கேற்ற நிலையில், இந்த அரசு பாஜக உடன் சேர்ந்து செயல்படுவது என்பது ஒரு அவதூறு. சமூக நீதி விடுதிகளில் மாட்டுக்கறி போட வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கை. மாட்டுக் கறி தான் போட வேண்டுமென நானும் சொல்லவில்லை. ஆனால், இதனை சில கும்பல் திரித்து விஷம பிரச்சாரம் பண்ணுகின்றனர். இதற்கு பின் சனாதான கும்பல் உள்ளது. உணவை வைத்து அரசியல் செய்ய கூடியவர்கள் தான் இந்த வேலையை செய்கிறார்கள். அரசின் உண்மையான நோக்கத்தை திசை திருப்ப வேண்டாம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+