வரிச்சியூர் செல்வத்தின் விரலில் "பாயும் சிறுத்தை".. நடமாடும் நகைக் கடைக்கு வந்த 3 புதிய வரவுகள்!
மதுரை: கூலிங் கிளாஸ் மட்டும்தான் தங்கத்துல இல்லை, மற்றபடி வரிச்சியூர் செல்வம் போட்டிருக்கிறது எல்லாமே தங்கம். புதிதாக வரிச்சியூரை அலங்கரிக்கும் தங்கத்தினாலான 3 மிருகங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தார். குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணராஜ், முனியசாமி ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் செந்தில்குமாரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனையடுத்து செந்தில் குமார் சென்னையில் தலைமறைவானார்.

இதனிடையே செந்தில்குமார் திடீரென மாயமாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடிக்க கோரியும் அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகள் செந்தில் குமாரை கொலை செய்தது தெரியவந்தது.
செந்தில் குமாரை சுட்டுக்கொன்று அவரது உடலை தாமிரபரணி ஆற்றில் வீசியதாக வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகள் தெரிவித்தனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து வரிச்சியூர் செல்வம், உள்ளிட பலரை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள வரிச்சியூர் செல்வம், தனக்கு ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார்.

அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த அக்டோபர் மாதம் மனு தள்ளுபடி செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கில் புதிதாக ஒட்டப்பிடாரம் காவல் துறையினர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் காவல் துறையினர் மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார். இந்நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.

ஜாமினில் வெளியே வந்த வரிச்சியூர் செல்வம் கடந்த ஜனவரி மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கொலை வழக்கில் தன்னை கைது செய்த வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க்கை சந்தித்து, ரவுடியிசத்தை கைவிட்டுவிட்டு திருந்தி வாழ போகிறேன். இனி எந்த தவறும் செய்ய மாட்டேன் என உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில் மதுரையில் வரிச்சியூர் செல்வம் புதிய நகைகளுடன் ஜொலி ஜொலித்தார். அவர் கழுத்தில் சிங்க முகம் கொண்ட ஒரு செயின், எருமை தலை கொண்ட டாலர் , கையில் சிறுத்தை மோதிரம் என 3 புதிய மிருகங்களை நகைகளாக போட்டுள்ளார். தனக்கு மிருகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அவற்றின் உருவம் பதித்த ஆபரணங்களை அணிந்துள்ளேன் என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நீதிமன்றத்தில் வரிச்சியூர் செல்வத்தை ஆஜர்படுத்திய போது அவரா என அடையாளம் கண்டுபிடிக்கவே தாமதமானது. அவர் உடம்பில் ஒரு குண்டு மணி தங்கம் கூட அவர் அணியாமல் வந்திருந்தார். அவர் கொலை வழக்கில் கைதாவதற்கு முன்பு எம தர்மனின் வாகனம், மும்பை பங்கு சந்தையின் காளை உருவம் பதித்த தங்க சங்கிலியை அணிந்திருந்தார். அது போல் காதுக்கு நிறைய தோடுகள், கால்களில் தண்டை அணிந்திருந்தார். இது போல் தோடுகள், தண்டை அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் அவர் சில பேட்டிகளின் போது தெரிவித்திருந்தார்.
-
தங்கம் விலை ஆறு மடங்கு உயருமா.. 1980ல் ஈரானில் நடந்த இதே சம்பவம்.. பொருளாதார நிபுணர் விளக்கம் -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
ஒரு நிமிஷம் நில்லுங்க..தங்கம் வாங்க போறீங்களா? கன் மாதிரி கம்பீரமா நிக்குது டாலர்? இனிதான் ட்விஸ்ட்! -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம்












Click it and Unblock the Notifications