Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை விசிக கொடிக்கம்ப விவகாரம்.. வருவாய்த் துறை அதிகாரிகள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை வெளிச்சநத்தம் கிராமத்தில் 45 அடி உயரக் கொடிக் கம்பத்தில் விசிக கொடியேற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர் உட்பட 3 பேரை மதுரை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்திருந்தார். அதைக் கண்டித்து வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த நிலையில், சஸ்பெண்ட் உத்தரவை மாவட்ட ஆட்சியர் வாபஸ் பெற்று இருக்கிறார்.

கடந்த 1996ல் மதுரை மாவட்டத்தில் உள்ள வெளிச்சநத்தம் கிராமத்தில் விசிக சார்பில் 25 அடி உயரத்தில் கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. அதை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்றி வைத்திருந்தார்..

madurai vck politics

கொடிக் கம்பம்: அந்த கொடிக் கம்பத்தை 25 அடியில் இருந்து சமீபத்தில் 45 அடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும், இதற்கு மாவட்ட நிர்வாகத்தில் இருந்து உரிய அனுமதி பெறவில்லை. இந்த கொடிக் கம்பம் குறித்த தகவல் கிடைத்தவுடன் இது குறித்து விசாரிக்க வருவாய்த் துறை அதிகாரிகள் அங்குச் சென்றுள்ளனர். 25 அடி உயரக் கூடிய கொடிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் 45 அடி கொடிக் கம்பத்திற்கு அனுமதி இல்லை என்பதை அப்போது விசிக நிர்வாகிகளிடம் வருவாய்த் துறை அதிகாரிகளும் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது விசிக நிர்வாகிகள் சிலர் வருவாய்த் துறை அதிகாரிகளைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், கொடி கம்பத்திற்கு அனுமதி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி திடீரென கொடிக்கம்பம் முன்பு போராட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

அனுமதி: அப்போது 20 அடி வரை கொடி கம்பம் இருந்தால் மட்டுமே அதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி வழங்க முடியும் என்றும், அதை விட உயரம் என்றால் சென்னையில் தான் அனுமதி வாங்க வேண்டும் என்பதை வருவாய் அதிகாரிகள் கூறிய போதிலும், போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசிக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பல மணி நேரம் பேச்சுவார்த்தை தொடர்ந்த நிலையில், அதன் பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகக் கொடிக் கம்பத்திற்கு அனுமதி அளித்துள்ளனர்.

சஸ்பெண்ட்: இதையடுத்து 45 அடி உயரக் கொடிக் கம்பத்தில் விசிக கொடியை ஏற்றிய திருமாவளவன், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இதற்கிடையே இந்த 45 அடி உயரக் கொடிக் கம்ப விவகாரம் தொடர்பாக இதில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறி வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், கிராம உதவியாளர் பழனியாண்டி ஆகிய 3 பேரையும் மதுரை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

ரத்து: இருப்பினும், இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இப்போது 3 அதிகாரிகளின் சஸ்பெண்ட் நடவடிக்கையை வாபஸ் பெறுவதாக கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+