மதுரை அருகே சுங்கச்சாவடியில் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி.. கட்டணம் இல்லாமல் பறந்த வாகனங்கள்
மதுரை: மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் அமைந்திருக்கிறது திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சுங்கச்சாவடியில் 52 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் செய்தனர். இதன் காரணமாக வாகனங்கள் கட்டணம் இன்றி சென்றன.
பொதுவாக மதுரையைச் சுற்றியுள்ள புதிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகமாக இருக்கும். இதனால் வாகன ஓட்டிகள் ஒவ்வொரு முறை செல்லும் போதும்,கணிசமான தொகையை செலுத்த வேண்டியதிருக்கும். மிகவும் கூட்டமான நாட்கள், பிரச்சனை ஏற்பட்டால் மட்டும் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க மாட்டார்கள்.

அதேநேரம் சுங்கச்சாவடியில் ஊழியர்கள் திடீரென வேலை நிறுத்தம் செய்தால் கட்டணம் வசூலிக்க மாட்டார்கள். அப்படியான சூழல் பொங்கல், தீபாவளி சமயங்களில் அவ்வப்போது நடைபெறும். போனஸ் கேட்டு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போது மட்டும் கட்டணம் இல்லாமல் செல்வார்கள். அப்படி ஒரு சம்பவம் நேற்று நடந்தது. இதைக்கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்பவர்களின் வசதிக்காக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் ராமேஸ்வரம், ராமநாதபுரம் , சிவகங்கை மாவட்டத்தின் கணிசமான மக்கள் செல்வார்கள். இந்த வழித்தடத்தில், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு 52 பேர் வேலை செய்து வருகின்றனர்.

சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக மாத சம்பளத்தில் பாதியை கொடுத்துவிட்டு மீதி பொங்கலுக்கு தருவதாக தெரிவித்தார்களாம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஊழியர்கள் மீதி பணத்தை கேட்டபோது நிர்வாகத்தினர் முறையாக பதில் அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் நேற்று மாலை 4 மணி முதல் பணியை புறக்கணித்து சென்றதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் கட்டணம் செலுத்தாமல் சென்றன. இதுகுறித்து ஊழியர்கள் கூறும் போது, சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் முறையாக எங்களை அழைத்து பேச வேண்டும். அதுவரை வேலை நிறுத்தம் தொடரும் என்றார்கள். இதற்கிடையே சுங்கச்சாவடி செயல்படாமல் இருந்ததால், வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சி அடைந்து, வாகனங்களை ஓட்டிச்சென்றார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications