அப்ப இந்துக்கள் அதிகமுள்ள இடங்களில் எஸ்டிபிஐ, முஸ்லீம் லீக் கொடி இருக்கக்கூடாதா?: வேலூர் இப்ராஹிம்
மதுரை: முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இடங்களில் பாஜக கொடியை வைக்கக்கூடாது என காவல்துறையினர் கூறுகின்றனர். அப்படி என்றால் பெரும்பான்மையான இந்துக்கள் இருக்கும் பகுதியில் எஸ்டிபிஐ போன்ற முஸ்லீம் கட்சியின் கொடி இருக்கக் கூடாது என கூறுகின்றனரா? என பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பனையூரில் அமைந்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீட்டின் அருகே இருந்த 45 அடி உயர கம்பத்தில், கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு பாஜக ஏற்பாடு செய்திருந்தது. அனுமதி பெறாமல் கொடிக்கம்பம் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு ஜேசிபி உடன் வந்தனர்.

அப்போது பாஜகவினர் அரசுக்கு எதிராக கோஷமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். போலீசார், பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்ற கொண்டு வந்த ஜேசிபி இயந்திரத்தையும் கற்களை கொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர். இந்நிலையில், ஜேசிபியின் கண்ணாடி உடைத்த வழக்கில், பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, பாஜக தொண்டர்கள் கன்னியப்பன், பாலமுருகன், செந்தில் குமார், சுரேந்திர குமார், வினோத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம், "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பாஜக கொடிக்கம்பம் நடப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால், மனிதநேய மக்கள் கட்சி, தமமுக உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அடிப்படைவாத இயக்கங்கள், தீவிரவாதத்தை ஊக்குவிக்க கூடிய எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்களுடன் இணைந்து திமுகவின் தூண்டுதலின் பெயரில் இஸ்லாமியர்கள், கொடி கம்பத்தை நட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சில இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து அந்தப் பகுதியில் கொடிக்கம்பம் இருக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த கொடிக்கம்பத்தை அகற்றும் காவல்துறையினருக்கு, அதே பகுதியில் விசிக, திமுக கொடிக் கம்பங்கள் இருப்பது கண்ணுக்கு தெரியவில்லையா? இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இடங்களில் பாஜக கொடியை வைக்கக்கூடாது என காவல்துறையினர் கூறுகின்றனர். அப்படி என்றால் பெரும்பான்மையான இந்துக்கள் இருக்கும் பகுதியில் எஸ்டிபிஐ போன்ற முஸ்லிம் கட்சியின் கொடி இருக்கக் கூடாது என கூறுகின்றனரா? இது மத வெறியை தூண்டிக் கூடிய விஷயமாக உள்ளது.
மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் பாகிஸ்தான், சவுதி அரேபியாவில் கட்சி நடத்தி வருகின்றனரா? 85 சதவீதம் இந்துக்கள் வாழ்கின்ற இந்தியாவில் தானே கட்சி நடத்தி வருகின்றனர். தேர்தல் வருகிறது என்பதற்காக திமுக அரசு செய்யும் சதிச் செயல் இது. இந்து நம்பிக்கையை இழிவுபடுத்துவது, இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களை தூண்டி விடக்கூடிய செயல்களை திமுக அரசு நிறுத்த வேண்டும் என எச்சரிக்கிறோம்.
அண்ணாமலை வீட்டின் அருகே கொடி கம்பம் ஏற்ற விடாமல் தடுத்த காரணத்தினால் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி நவம்பர் 1ஆம் தேதி முதல் 10,000 பாஜக கொடிக்கம்பங்கள் தமிழ்நாடு முழுவதும் ஏற்ற உள்ளோம். ஒவ்வொரு நாளும் 100 கொடிக் கம்பங்களை இஸ்லாமியர் வசிக்கும் பகுதி உட்பட அனைத்து பகுதிகளிலும் ஏற்றுவோம்.
பாஜகவைப் பொறுத்தவரை தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்கள் ஹிந்து பேரறிவாளனாக இருந்தாலும், முஸ்லிம் பாட்ஷாவாக இருந்தாலும், நாளை கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதம் செய்தாலும் எதிர்ப்போம், எங்களுக்கு தேசம் தான் முக்கியம். திமுக உட்பட பிற கட்சியினர் தேர்தலுக்காக இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு மோதல் போக்கை ஏற்படுத்துகின்றனர். எனவே இதனை இஸ்லாமியர்கள் யாரும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்" எனப் பேசியுள்ளார்.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications