சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! 5 ஆண்டுகள் நடந்த விசாரணை நிறைவு.. தீர்ப்பு தேதி அறிவிப்பு
மதுரை: தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தற்போது விசாரணை அனைத்தும் நிறைவடைந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கின்றது மதுரை நீதிமன்றம். கடந்த 2020 ஆம் ஆண்டு தந்தை மகன் போலீஸ் காவலில் கொல்லப்பட்டிருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் தனது மகன் பென்னிக்ஸ் உடன் சாத்தான்குளம் பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்தார்.

தந்தை மகன் கொலை வழக்கு
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு நேரத்தில், கடையை திறந்து வைத்து இருந்ததாக போலீஸ் விசாரணைக்கு ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். போலீஸ் கஸ்டடியில் தந்தை - மகன் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குறுக்கு விசாரணை நடந்தது
தந்தை மகன் லாக் அப் டெத் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தந்தை மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்படனர். தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பலமுறை இவர்கள் ஜாமீன் கேட்டும், ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தற்போது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
வரும் 23 ஆம் தேதி தீர்ப்பு
தொடர்ந்து சிபிஐ தரப்பில் கூடுதலாக 400 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் மதுரையை சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
பின்னர் அவர் நேரில் ஆஜராகாமல் போனார். இவ்வாறாக தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது விசாரணை அனைத்தும் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் வரும் மார்ச் 24 ஆம் தேதி சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கின்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications