“நிர்வாணம்”.. கொட்டிய ரத்தத்தை நானே சுத்தம் செய்தேன்.. பல்வீர் சிங் பற்றி அதிர்ச்சி வாக்குமூலம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை : விசாரணைக் கைதிகளின் பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அருண் குமார் என்ற இளைஞர், பல்வீர் சிங் நிர்வாணமாக நிற்க வைத்து துன்புறுத்தி தனது பற்களை பிடுங்கியதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைக் கைதிகளின் பற்களை நெல்லை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கிய விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Victim explains about ASP balveer singh torture in custody

ஏ.எஸ்.பி பல்வீர் சிங், நெல்லை எஸ்.பி சரவணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆய்வாளர்கள் 3 பேர் உட்பட மொத்தம் ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர் வாக்குமூலம்

இந்நிலையில், பல்வீர் சிங் மீது குற்றம்சாட்டி பாதிக்கப்பட்ட நபர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். பல் பிடுங்கிய விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், வழக்கறிஞர் ஆகியோர் கூட்டாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அருண்குமார், "யூனிஃபார்ம் போடாத இரண்டு போலீசார், என்னை பின்பக்கத்திலிருந்து இரு கைகளால் இறுகப் பிடித்துக் கொண்டு எனது கால்களை அசையவிடாமல், அவர்கள் கால்களால் மிதித்துக்கொண்டார்கள்.

அப்போது ஏஎஸ்பி பல்வீர்சிங் என் முன்னால் வந்து என்னை வாயைத் திறக்க சொன்னார். நான் திறக்க மறுத்ததால் பல்வீர் சிங் அவர் கையில் வைத்திருந்த கல்லால் எனது இடது பக்க கீழ் உதட்டில் ஓங்கி அடித்தார். நான் வலி தாங்க முடியாமல் கத்தினேன். அப்போது, வாயைத் திறக்கச் செய்து தன் கையில் வைத்திருந்த சுமார் கால் கிலோ எடை கொண்ட கருங்கல்லை வைத்து மேல்தாடையிலுள்ள பற்களில் அழுத்தி தேய்த்தார்.

கதறி அழுதாலும் கொடூரம்

மேலும், பற்களின் மேலே உள்ள சதைப்பகுதியையும் சேர்த்து தேய்த்தார். என்னால் வலி தாங்க முடியாமல் கதறி அழுதபோது தொடர்ந்து கீழ்த்தாடையில் உள்ள பற்களையும் சதையினையும் தேய்த்தார். உயிர் போகும் அளவுக்கு அளவுக்கு வலித்தது. அதன் பின்பு எனது மேல்தாடையிலுள்ள பல்லை ஓங்கி ஓங்கி பல முறை அடித்தார். அப்போது பல் பாதி உடைந்தது. நான் வலி தாங்க முடியாமல் கத்தினேன்.

நான் வலி தாங்க முடியாமல் வாயை மூடியபோதெல்லாம் உதட்டில் கல்லால் அடித்தார். பின்னர் கீழ் வரிசையில் உள்ள பல்லில் கல்லை வைத்து தட்டி தட்டி உடைத்தார். இதனால் கீழ்பக்கம் பற்கள் பாதி உடைந்து கீழே விழுந்தது. மீண்டும் ஏஎஸ்பி பல்வீர் சிங், எனது வலது பக்க கீழ்தாடை பற்களில் கல்லை வைத்து தட்டினார். பின்னர் பற்களுக்கு நடுவே கல்லை வைத்து கடிக்கச் சொன்னார். நான் கடிக்க மறுத்தபோது பின்னாலிருந்து லத்தியால் ஓங்கி அடித்தார்கள். லத்தியால் அடித்ததால் வலி தாங்க முடியாததால் பல்லில் கல்லை கடித்தேன். பல்வீர்சிங், பல்லை பலமுறை ஆட்டி வெடுக்கென பிடுங்கி எடுத்துவிட்டார்.

கொட்டிய ரத்தத்தை சுத்தம் செய்ய வைத்தனர்

Victim explains about ASP balveer singh torture in custody

லத்தியால் அடித்ததால் இடுப்பு, பின்பகுதி மற்றும் கால்களில் பயங்கர வலியாக இருந்தது. பல்லை அடித்து உடைத்ததால் கழுத்து, தலை, முகம் என உடல் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மிகவும் வலியாக இருந்தது. 2 மணி நேரமாக நிர்வாணமாக நிற்க வைத்து கடுமையாகத் தாக்கினர். எங்கள் உடம்பில் இருந்து கொட்டிய ரத்தத்தை எங்களையே சுத்தம் செய்ய வைத்தனர். நாங்கள் உள்ளாடையுடன் ரத்தக் கறையுடன் இருந்ததை பார்த்த என் அம்மா கதறி அழுதார். அவர்களை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு எங்களை மிரட்டினார்.

பல்வீர்சிங், இந்தியில் என்னைத் திட்டிக்கொண்டே கன்னத்தில் அறைந்தார். மேலும், இங்கு நாங்கள் அடித்ததை யாரிடவும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் உங்கள் மீது பொய் வழக்கு போட்டு உங்களை உள்ளே தள்ளி விடுவேன். உங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகிடும். அதனால் யாரும் கேட்டால், பைக்கில் இருந்து கீழே விழுந்ததாக சொல்ல வேண்டும் என மிரட்டினார். இதனால், மருத்துவர், என்ன நடந்தது என்று கேட்டபோதுகூட, நான் போலீஸுக்கு பயந்து உண்மையைச் சொல்லவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+