திருப்பரங்குன்றம்: அவ்வளவு பஞ்சாயத்து நடந்துட்டு இருக்கு.. விஜய் மட்டும் வாய் திறக்கலையே!
மதுரை: திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் தொடர்ந்து பேசி வருகின்றன. இதற்கு எதிராக, ஜனநாயக அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இருப்பினும் இப்போது வரை விஜய் இந்த விஷயத்தில் வாய் திறக்காமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த அளவுக்கு திருப்பரங்குன்றம் விஷயத்தை நார்மலாக்க பாஜக தரப்பு முயற்சிக்கும் நிலையில், இப்போது கூட விஜய் வாய் திறக்காமல் இருப்பது நியாமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து
திருப்பரங்குன்றம் மலை மீது, சிக்கந்தர் தர்காவுக்கு பக்கத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பது இந்து அமைப்புகளின் கோரிக்கை. இது தொடர்பாக நீதிமன்றம் சென்று உத்தரவையும் பெற்றிருந்தன. இருப்பினும் ஜனநாயக அமைப்புகள் இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. தீபம் ஏற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தன. எனவே, இந்து அமைப்புகளின் ஆசைக்கு தற்காலிகமாக முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கிறது.
தீபம் பிரச்சனை
மறுபுறம் வரலாற்று ஆய்வாளர்கள், இந்து அமைப்புகள் தீபம் ஏற்ற அனுமதி கோரும் தூண், நில அளவை தூண் என்றும், இதில் தீபம் ஏற்றியதாக வரலாறே கிடையாது என்றும் கூறியிருக்கின்றனர். இப்படியாக இந்த பிரச்சனை தீவிரமாக எழுந்திருந்தது. தற்போது தேர்தலையொட்டி இந்த பிரச்சனை மீண்டும் தலையெடுக்க தொடங்கியிருக்கிறது.
அதிமுகவா? பாஜகவா?
அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, "திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவு இது. தீபம் ஏற்ற வேண்டும் எனில், இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்" என்று சொல்லி வெளிப்படையாகவே வாக்கு கேட்டிருக்கிறார். அவரது பேச்சு, சோஷியல் மீடியாக்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
என்னங்க இது, தர்கா பக்கத்தில் தீபம் ஏற்றப்படும் என்று சொல்லி அதிமுக வாக்கு கேட்கிறது, அப்படின்னா பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் என்னங்க வித்தியாசம்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
மவுனமான விஜய்
ஆனால், இந்த விஷயம் தொடர்பாக விஜய் எதுவும் வாய் திறக்கவில்லை. இந்த பிரச்சனை உச்சத்தில் இருந்தபோதே விஜய் சைலண்டாகத்தான் இருந்தார். பரவாயில்லை, இப்போது தேர்தலுக்காக இந்த மேட்டர் மீண்டும் கிளப்பப்படுகிறதே.. அப்போதாவது வாய் திறக்க கூடாதா? என விஜய்க்கு பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
'ஜன நாயகன்' என்று திரைப்படத்திற்கு சொகுசாக பெயர் வைத்தால் மட்டும்போதுமா? களத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்க குரல் எழுப்ப மாட்டாரா? என்றும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
தவெக வேட்பாளரை பாருங்க
மறுபுறம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திருப்பரங்குன்றம் தொகுதியின் வேட்பாளராக சி.டி.நிர்மல் குமாரை அறிவித்திருப்பது குறித்தும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஏனெனில் நிர்மல் குமார் முன்னாள் ஆர்எஸ்எஸ்காரர் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இதெல்லாம் விஜய்யின் அரசியல் நோக்கத்தின் மீதான சந்தேகத்தை அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications