விநாயகனே வினை தீர்ப்பவனே.. மதுரை மத்திய சிறை கைதிகள் தயாரிக்கும் அழகான பிள்ளையார் சிலைகள்!
மதுரை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, மதுரை மத்திய சிறையில், கைதிகளால் 500க்கும் மேற்பட்ட விதைப்பந்து விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி, வரும் 31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதற்காக விநாயகர் சிலைகள் செய்யும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மதுரை சிறையில், ஆயுள் கைதிகளால் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான சிறையாக விளங்கும் மதுரை மத்திய சிறைச்சாலையில், தண்டனை கைதிகளை வைத்து இனிப்பு, பலகாரம், நர்சரி கார்டன் உள்ளிட்ட பல்வேறு வகையான விற்பனை, சிறை அங்காடி மூலம் நடைபெற்று வருகிறது. மேலும் இங்குள்ள 1500-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு, மருத்துவ பேண்டேஜ், ஆபீஸ் கவர் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கற்றுத்தரப்படுகின்றன. இதன்மூலம் கைதிகளுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. மதுரை சிறை பஜார் மூலம் கைதிகள் தயாரித்த உணவு பண்டங்கள் விற்கப்படுகின்றன.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரை மத்திய சிறையில் உள்ள சிறைக்கைதிகள் சிறை வளாகத்தில் களிமண்ணால் ஆன சிலைகளை செய்து அதனுள்ளே புன்னை, புங்கை, வேப்பம், நாவல் உள்ளிட்ட மரங்களின் விதைகளை வைத்து 1 அடி மற்றும் ஒன்றரை அடி உயரத்தில் விநாயகர் சிலைகளை தயார் செய்து வருகின்றனர்.
இந்த பணியானது இன்னும் இரு நாட்கள் நடைபெறும் எனவும் இந்த பணிகள் முடிந்தவுடன் சிறை வளாகத்தில் இருக்கக்கூடிய சிறை அங்காடி மூலம், சந்தை மதிப்பை விட குறைந்த விலையில், விநாயகர் சிலைகளை விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதவி சிறை அலுவலர் பழனி கூறியதாவது: கைதிகளுக்கு பல்வேறு தொழில்கள் புதிதாக கற்றுத்தரப்படுகின்றன. அதில் ஒன்று தான் சிலை தயாரிப்பு. இதுவரை 500க்கும் மேற்பட்ட சிலைகளை தயாரித்துள்ளனர். இதற்கான களிமண் , பெட்ரோல் பங்க்கிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்தியாவிலேயே மதுரை சிறையில் மட்டும்தான் முதன்முதலாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. விரைவில் மக்களுக்கு குறைந்த விலையில் விற்க உள்ளோம் என கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications