Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணியிடம் செங்கோல் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நீதிபதிகள் ஒன்றும் ஆகம விதி நிபுணர்கள் இல்லை எனக்கூறியதோடு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என உறுதியாக கூறிவிட்டனர்.

மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மதுரை சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது. தினமும் மதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

We are not Agama Vidhi experts Madurai High Court Judges says in scepter donot give to Minister PTR Mother

விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந்தேதி நடக்கிறது. 22-ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. இன்று 7 நாள் விழா கொண்டாடப்படுகிறது. நாளை 8 ம் நாள் விழா நடைபெற உள்ளது.

8ம் விழாவான நாளை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பட்டாபிஷேகத்தின்போது செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும். அதாவது மீனாட்சியம்மன் கையில் இருக்கும் செங்கோல் கோவில் அறங்காவலர் குழு தலைவரிடம் ஒப்படைக்கப்படும்.

அதன்படி தற்போது மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி உள்ளார். நாளை இவரிடம் கையில் தான் செங்கோல் வழங்கப்பட உள்ளது. இதற்கிடையே தான் ருக்மணியிடம் செங்கோல் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தினகரன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 16ம் தேதி மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் விசாரித்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛மதுரை மீனாட்சியம்மன் கோவில் பட்டாபிேஷக நிகழ்ச்சியில் அம்மன் கையில் இருந்து செங்கோல் கோவில் அறங்காவலர் குழு தலைவரிடம் வழங்கப்படும். ஆகம விதிகளின் படி திருமணம் ஆகாதவர், கணவரை இழந்தவர் செங்கோலை பெற்று கொள்ள முடியாது. தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி உள்ளார். இவர் கணவரை இழந்தவர். இதனால் செங்கோலை அவருக்கு பதிலாக உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்'' என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை நீதிபதி சரவணன் ஏற்கவில்லை. மேலும், ‛‛கணவரை இழந்தவர் செங்கோல் வாஙகக்கூடாது என்று ஆகம விதிகளில் எங்கு உள்ளது? ஆகம விதியில் எந்த இடத்தில் இந்த விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்து தானே? என கேள்வி கேட்டதோடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தின் இருநீதிபதிகள் அடங்கிய அமர்வில் மனுதாரரான தினகரன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛கோவிலில் ஆகம விதிகள் முறையாக பின்பற்ற வேண்டும். இதுதொடர்பாக சீதல குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து கணவரை இழந்தவருக்கு செங்கோல் வழங்குவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அதோடு உரியவரிடம் செங்கோல் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் வாதாடுகையில், ‛‛தனி நீதிபதி உத்தரவு தெளிவாக உள்ளது. அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை'' என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், ‛‛கோவில் ஆகம விதிகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள். ஏனென்றால் அதோடு அந்த காலத்தில் என்ன நடந்தது என்பது தெரியாது? குறிப்பிட்ட நூல்களின் அடிப்படையில் நீதிமன்றம் எந்த முடிவுக்கும் வர இயலாது. ஆகம விதிகள் தொடர்பாக வேறு குறிப்புகள் இல்லையா? கோவிலில் இதனை மட்டும் பின்பற்ற வேண்டும்? இதனை பின்பற்ற வேண்டாம்? என்பதற்கு வேறு சான்றுகள் இருக்கிறதா?.

மேலும் ஒரு மணிநேரத்தில் ஆகம விதியின்படி எது சரி? எது தவறு? என எந்த முடிவையும் எடுத்து விட முடியாது. ஏனென்றால் நீதிபதிகள் ஒன்றும் ஆகம விதி நிபுணர்கள் இல்லை. இதனால் ஆகம விதிகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள். அதனடிப்படையில் அடுத்த ஆண்டு வேண்டுமானால் உரிய உத்தரவு பிறப்பிக்கலாம்'' எனக்கூறி தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க இருநீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+