Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'22 ரூபாய் இல்லாததால் 6ம் வகுப்பு சேர முடியல'.. ஸ்டாலினை நெகிழ வைத்த அப்பள வியாபாரி ராஜேந்திரன் பேட்டி

Subscribe to Oneindia Tamil

மதுரை: அந்த காலத்தில் 22 ரூபாய் இல்லாததால் தன்னால் 6ம் வகுப்பு சேர முடியவில்லை.. அந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவுகிறேன் என்று மதுரை அப்பள வியாபாரி ராஜேந்திரன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கல்வி தான் இந்த உலகத்தில் ஆகச்சிறந்த சொத்து. அசுரன் படத்தில் வரும் டயலாக் அதற்கு சிறந்த உதாரணம். உன்னிடம் காடு இருந்தால் பிடுங்கி கொள்வார்கள்.பணம் இருந்தால் பறித்துக் கொள்வார்கள். ஆனால் படிப்பை மட்டும் பறிக்கவே முடியாது. படிப்பு மட்டும் சரியாக இருந்துவிட்டால், எல்லாவற்றையும் சுயமாக தேடிக்கொள்ளலாம்.

what CM mk stalin told me? madurai appala viyabari rajendran super interview

அதனால் தான் அரசு இலவமாக கல்வியை வழங்கி வருகிறது. வசதி உள்ளவர்கள் மட்டுமல்ல, வசதி இல்லாதவர்களும் நல்ல கல்வியை இங்கு பெற முடியும். அதேநேரம் தனியார் பள்ளிகள் போல் அரசு பள்ளிகள் கட்டமைப்பு ரீதியாக இப்போது தான் வளர்ந்து வருகிறது. ஏழை மாணவர்கள் மட்டுமே கல்வி பயிலும் இடமாக மாறி உள்ள அரசு பள்ளிகளுக்கு தனி ஒருவராக சத்தம் இல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் அப்பள வியாபாரி ராஜேந்திரன்.

மதுரை தத்தனேரியைச் சேர்ந்த 86 வயதாகும் டிபி ராஜேந்திரன், இந்த வயதிலும் சுறுசுறுப்பாக அப்பளம், மோர்மிளகாய், வத்தல், வடகம் ஆகியவற்றை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்த ஊர் விருதுநகர். 5-ம் வகுப்பு வரை படித்தவர் விருதுநகரில் பூண்டு கடையில் 25 ரூபாயில் மாத சம்பளத்திற்கு வேலைக்கு போயிருக்கிறார். உழைத்து கிடைத்த பணத்தை உதாரித்தனமாக செலவு செய்யாமல் சிறுக சிறுக சேகரித்துள்ளார். அப்படி 300 ரூபாய் பணத்துடன் 1951-ம் ஆண்டில் மதுரைக்கு வந்திருக்கிறார்.

மதுரைக்கு அந்த காலத்தில் வந்த போது முதலில் அரிசி வியாபாரம் செய்திருக்கிறார், பின்னர் காய்கறி வியாபாரத்தை செய்திருக்கிறார். அதில் ஓரளவு வருமானம் கிடைத்திருக்கிறது. அப்படியே அப்பளம், வடகம், மோர் மிளகாய் வியாபாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். தினமும் சைக்கிளில் போய் அப்பளம் வடகத்தை வியாபாரம் செய்து வந்துள்ளார்.

அந்த பணத்த சேகரித்து 1988-ம் ஆண்டில் முதல் முதலாக இரு சக்கர வாகனம் வாங்கி உள்ளார். திருமணம் ஆகி அவருக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. மூன்று குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்து திருமணம் செய்து வைத்துவிட்டார். அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் மூன்று பெண்குழந்தைகளை கரை சேர்த்த பிறகு பேத்திகளுக்கும் வேண்டிய வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்.

அதேநேரம் இவர் மனதிற்குள் தன்னால் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிக்கமுடியாமல் போனது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. காரில் அரசு பள்ளியை கடக்கும் போது தன்னால் படிக்க முடியாமல் போய்விட்டதே என்ற ஏக்கம் இவருக்குள் நீண்ட காலமாக இருந்துள்ளது.இதையடுத்து மதுரையில் சம்பாதித்த பணம் அத்தனையையும் பொதுமக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தி வருகிறார். வாழ்க்கையில் இப்போது அவர் சம்பாதிக்கும் பணம் அத்தனையையும் படிக்க கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார். மதுரை, செல்லூர் வட்டாரத்தில் திருப்பதி விலாஸ் கடை வைத்திருக்கும் டி.பி.ராஜேந்திரன் ஏராளமான முறை சமூக சேவைகளை செய்திருக்கிறார். தன்னால் முடிந்த உதவிகளை இல்லாதவர்களுக்கு செய்து வருகிறார்.

what CM mk stalin told me? madurai appala viyabari rajendran super interview

இவர் கடந்த 2018-ம் ஆண்டு மதுரை திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பறைகள், இறை வணக்கக் கூட்ட அரங்கம், இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவற்றை ரூ.1.10 கோடியில் கட்டிடம் கட்டி கொடுத்துள்ளார். இதுதவிர கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் ரூ.71. 45 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள், போர்வெல், உணவுக்கூடம் கழிப்பறைகளை கட்டிக் கொடுத்திருக்கிறார். இதுதவிர கஜா புயலின் போது பாதிக்கப்பட் மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார்.

வலது கைக்கு தெரியாமல் இடது கையில் உதவுவது என்பது ராஜேந்திரனின் பழக்கமாக இருந்துள்ளது. எந்த விளம்பரமும் தேடிக்கொள்ளவில்லை. இவரை பற்றி கேள்விப்பட்ட மதுரை மாநகராட்சி ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார் நேரில் அழைத்து பாராட்டினார். இதையடுத்தே ராஜேந்திரனின் என்னென்ன சேவைகள் செய்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது.

மதுரை மாநகராட்சி திரு.வி.க. பள்ளி சமையல் அறை மோசமான நிலையில் உள்ளதால் அங்கு ரூ.7 லட்சத்தில் புதிய சமையல் அறையை கட்டித் தர உள்ளார். இதுதவிர இவருக்கு பள்ளிக்கூடம் ஒன்று நடத்த வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது.ஆனால் சம்பளம் கொடுக்க முடியாது என்பதை அறிந்த ராஜேந்திரன், அரசு சார்பில் மீனாட்சியம்மன் கோயில் புது மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்க உள்ளனர். அதற்கு ரூ.2.5 கோடி நிதியுதவி கொடுத்துள்ளார்.. செல்லூரில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டித் தரவும் முடிவு செய்துள்ளாராம்.

மதுரைக்கு வரும் போது எதுவும் இல்லாமல் வந்த அவர், மதுரையில் சம்பாதித்த பணத்தை மதுரை மக்களுக்கே செலவு செய்தார். இவரது சேவையை அறிந்து சாலமன் பாப்பையா நேரில் சென்று பாராட்டினார். அதன்பின்னர் அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக மாறினார் ராஜேந்திரன். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று அப்பள வியாபாரி ராஜேந்திரனை பாராட்டினார்.

what CM mk stalin told me? madurai appala viyabari rajendran super interview

இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அப்பள வியாபாரி ராஜேந்திரன், "முதல்வர் என்னிடம் பேசும் போது, இப்படி ஒரு மனுசன் மதுரையில் இருக்கிறாரா.. உங்களை போல் ஊருக்கு இரண்டு பேர் இருந்தால், இன்னும் படிப்பு, கல்வி அறிவில் தமிழகம் எங்கேயோ போய்விடும் என்றார். என்னை பொறுத்தவரை இதை பார்த்த அனைவரும், வசதி உள்ளவர்கள் அவர்களால் முடிந்த உதவி செய்தார்கள் என்றால், தமிழ்நாடு கல்வியில் மட்டுமல்ல, எல்லா துறையிலும் முன்னேறும். அந்த எண்ணம் மதுரை மக்கள், தமிழ்நாடு மக்களுக்கு வரணும் என்பது என்னோட கருத்து" என்றார்.

அரசுப்பள்ளிக்கு நிதி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த ராஜேந்திரன், "நான் வந்து ஐந்தாம் வகுப்பு தான் படித்தேன்.. 6ம் வகுப்பு போக வேண்டும் என்றால் 22 ரூபாய் வேண்டும் என்ற நிலை இருந்தது. எங்க அப்பா முடியவில்லை என்றார். நான் கொஞ்ச நாள் தோட்ட வேலை பார்த்து , கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து மதுரைக்கு வந்தேன்.. நான் படிக்க முடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டேன்.. அந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது என்று நினைத்தேன். பள்ளிக்கூடத்து பிள்ளைகளுக்கு என்னால் முடிந்ததை செய்தேன்.அதற்காக ஆண்டவன் வேண்டிய வசதிகளை எனக்கு கொடுத்துள்ளான்.

நான் விளம்பரத்தை விரும்ப மாட்டேன்.. சாலமன் பாப்பையா உலகில் உள்ள அனைவரும் பாராட்டும் படி என்னை செய்துவிட்டார். சேதுபதி பள்ளியை நான் தனியார் பள்ளிக்கு நிகராக வசதிகளுடன் மாற்ற ஒரு கோடி செலவு செய்தேன். பலரும் இப்போது படிக்க வருகிறார்கள். கைசலாபுரம் பள்ளிக்கும் உதவினேன்" இவ்வாறு கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+