Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லிட்டர் பெட்ரோல்.. சர்னு இறங்கிய 100 மில்லி.. மலைத்த மதுரை கோரிப்பாளையம்.. இந்த பங்க்-கில் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. மதுரையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, பேசுபொருளாகவும் உருவெடுத்துள்ளது.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில், ஒரு தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது... இந்த பங்கிற்கு நேற்றிரவு சில இளைஞர்கள் பைக்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக வந்திருக்கிறார்கள்..

what happened in Madurai Petrol Bunk and Less than 100 ml 1 liter Petrol in Goripalayam petrol station

பங்க்: அப்போது பங்க்கிலிருந்த ஊழியர்கள், சரியாக பெட்ரோலை நிரப்பவில்லை என்று தெரிகிறது.. அதாவது, ஒரு லிட்டர் பெட்ரோலில் 100 மில்லி அளவிற்கு பெட்ரோல் போடாமலே, பெட்ரோல் போடப்பட்டதாக கணக்கு காட்டிவிட்டார்களாம். இதனால், அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் , இதுகுறித்து கேட்டிருக்கிறார்கள். ஆனால், எந்த பதிலும் முறையாக தரவில்லையாம்.

இதனால், மறுபடியும் பெட்ரோல் பங்கிற்கு சென்று, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.. மறுபடியும் பைக்கில் பெட்ரோல் போடுமாறு சொல்லி உள்ளார்கள்.. அப்போதுதான், பங்க்கில் வைக்கப்பட்டிருக்கும், அளவீடு மானிகளில், ஒவ்வொரு லிட்டரிலும் 100 மில்லி அளவு குறைவாக எடுப்பது தெரியவந்தது.

வாக்குவாதம்: உடனே இதை அந்த இளைஞர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.. வீடியோ எடுப்பதை கவனித்துவிட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் உடனடியாக, அந்த மிஷினில் ஏதோ மாற்றம் செய்தாராம்.. அதையும், இந்த இளைஞர்கள் வீடியோ எடுத்துள்ளனர்..
இதற்கு பிறகு, பங்க் ஊழியர்களிடம், இளைஞர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பிறகு அங்கிருந்து கிளம்பி, மதுரை தல்லாகுளம் போலீஸுக்கு போனார்கள்.. கோரிப்பாளையம் பெட்ரோல் பங்க்கில் நடந்த முறைகேடு குறித்தும் இளைஞர்கள் புகார் அளித்தனர்..

இந்த புகாரின் பேரில் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், பெட்ரோல் பங்க்கில் எடுக்கப்பட்ட வீடியோ, இணையத்தில் பரவி பரபரப்பை கிளப்பிவருகிறது.

வேண்டுகோள்: நுகர்வோர்களுக்கு சரியான அளவில், சரியான விலையில், சரியான பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு சட்டங்கள் இருக்கின்றன.. ஆனாலும், பெட்ரோல் அளவில் குறைத்து நடக்கும் நடக்கும் இப்படியான முறைகேட்டை தடுக்க வேண்டும் என்றும், பெட்ரோல் பங்கில் நுகர்வோர்களுக்கு சரியான பெட்ரோல் அளவை வழங்குவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+