Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் கணவர் குழந்தைகளுடன் சென்ற கர்ப்பிணி.. பின்னால் எமனாக வந்த போர்வெல் லாரி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேநரிமேட்டை சேர்ந்த சரவணகுமார் என்பவர் தனது மனைவி கவிதா மற்றும் இரண்டு மகள்ளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சரவணக்குமாரின் மனைவி 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர்களின் இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த போர்வெல் லாரி எமனாக மாறியது.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் செல்லக்கூடாது. குழந்தைகளுடன் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். ஏனெனில் தேசிய நெடுஞ்சாலைகளில் அசுர வேகத்தில் வரும் வாகனங்கள், வேகத்தை குறைக்க முடியாமல் முன்னால் செல்லும் வாகனங்கள் மீது மோதுவது அடிக்கடி நடக்கிறது. அப்படித்தான் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நடந்துள்ளது..

What happened to the pregnant woman whose husband went with the children in Madurai

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நரிமேட்டை சேர்ந்த 36 வயதாகும் சரவணகுமார், சோழவந்தானில் உள்ள ஒரு பிஸ்கட் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கவிதாக்கு 30 வயது ஆகிறது, இவர்களுக்கு சிவானி (7), வைஷ்ணவி (5) என 2 மகள்கள் உள்ளனர். கவிதா 3-வது முறையாக 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று கவிதா சொந்த ஊரான வயலூருக்கு செல்ல விரும்பினார். தனது கணவர் சரவணகுமார் மற்றும் மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் நரிமேட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பினர். வாடிப்பட்டி அருகே உள்ள கட்டகுளம் பிரிவில் வந்தபோது பின்னால் வந்த போர்வெல் லாரி, சரவணகுமார் ஓட்டிய பைக்கின் மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி கவிதா மீது லாரி ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சரவணகுமார், சிவானி, வைஷ்ணவி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வலதுபுறம் தான் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பயணிக்க வேண்டும்.இடது புறம் பயணிப்பதாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். முன்னால் ஏறி வரும் பெரிய வாகனங்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை கவனிக்காமல் இடித்துவிடுவது அடிக்கடி நடக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+