அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க வரும் ஆளுநர் ரவி? அமைச்சர் மூர்த்தி சொன்ன விளக்கம்! பரபரப்பு
மதுரை: பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்க்க ஆளுநர் வருகை தர உள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் இது குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை ஜன.15ஆம் தேதி முதல் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் சென்னை உட்பட பெருநகரங்களில் வசிப்போர் தங்கள் குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடச் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

பொங்கல்
மக்கள் எளிதாக தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளையும் அறிவித்துள்ளன. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உட்படப் பெருநகரங்களில் இருந்து 16,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் ஒரே இடத்தில் மக்கள் நெருக்கடி அதிகரிப்பதைத் தவிர்க்க கோயம்பேடு, தாம்பரம், பிராட்வே, கே.கே.நகர், மாதவரம் என ஐந்து பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர 340 இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு
இது மட்டுமின்றி தெற்கு ரயில்வே சார்பிலும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ஜல்லிக்கட்டு தான். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டிற்கு வருவார்கள்.

அமைச்சர் மூர்த்தி
இதனிடையே அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆளுநர் ரவி நேரில் பார்க்க வர உள்ளதாகத் தகவல் வெளியானது.. இந்தச் சூழலில் இது குறித்து அமைச்சர் மூர்த்தி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தினை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மதுரை மேயர் இந்திராணி, மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் ஆய்வு செய்தனர்..

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
பின் செய்தியாளர்களிடம் பேசிய வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், "அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆலோசனை குழு முன்னிலையில் நடைபெறுகிறது.. மதுரை மாவட்டத்தின் மூன்று ஊர்களிலும் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமலும் பாதுகாப்பான முறையிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குளுறுபடி இல்லை
சிறப்பாக விளையாடிய காளைகளின் பட்டியல்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த காளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது... காலை பதிவு ஆன்லைன் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது... தகுதியான மாடுகள் பங்கேற்க வழிவகை செய்துள்ளது.. பரிசு வழங்குவதில் எந்த ஒரு குளறுபடியும் இருந்ததில்லை.. இனி வருங்காலங்களிலும் இருக்காது.. கடந்த ஆட்சியில் நடந்த குளறுபடி தொடர்பாக மாவட்ட ஆட்சியரை நீதிமன்றம் அழைத்தனர்..

ஆளுநர் ரவி
ஆளுநர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வந்தால் அவருக்குத் தேவையான முழு பாதுகாப்பை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் வழங்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.. நாளை ஜன.15ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.. இதை நேரில் பார்க்க ஆளுநர் வருகை தர உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், ஆளுநர் வந்தால் போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இருப்பினும், ஆளுநர் டெல்லியில் இருப்பதால்.. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்க்க வர வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications