குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் சாலையில் திடீர் விபத்து.. தார்ப்பாய் போட்டு மூடிய போலீசார்
மதுரை: மதுரையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் சாலையில் திடீரென விபத்து ஏற்பட்டது. அப்போது போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தை தார்போய் போட்டு மூடினர். இந்த விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தமிழகத்திற்கு இன்று வருகை தந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரினம் மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து சனிக்கிழமை (இன்று) காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகை தந்தார்.
குடியரசுத் தலைவர் செல்லும் மதுரை அவனியாபுரம் சாலையின் குறுக்கே வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்ட நிலையில், கண்ணாடிக்கடை உரிமையாளர் சுரேஷ் என்பவரின் கார் அந்த வழியாக சென்ற போது விபத்துக்குள்ளானது. கார் கவிழ்ந்த விபத்தினால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வைக்கம் பெரியார் சாலையில் இந்த விபத்து நடந்திருந்தது.

அவனியாபுரம் சாலை
குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி, மதுரையில் அவனியாபுரம் அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் வாகனம் செல்ல அனுமதிக்கவில்லை. மாறாக அவனியாபுரம் செம்பூரணி சாலை வழியாக வைக்கம் பெரியார்நகர் ரிங் ரோடு சென்று அங்கிருந்து மண்டேலா நகர் செல்ல போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். அப்போது அவனியாபுரம் செம்பூரணி ரோடு சந்திப்பில் வைக்கம் பெரியார் நகர் ரோட்டில் குடியரசுத் தலைவர் வரும் பாதையில் சுரேஷ் என்பவரின் கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

போலீசார் அதிரடி
சம்பவம் அறிந்த அவனியாபுரம் காவல்துறையினர் அந்தக் காரை பளுதூக்கும் இயந்திரம் வைத்து தூக்கி அந்த காரை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.குடியரசுத் தலைவர் செல்லும் பாதையில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக விபத்து நடந்ததால் அந்த இடத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த காரை போலீசார் தார் பாய் போட்டு மூடினர்.

குடியரசுத் தலைவர்
பின்னர் குடியரசுத் தலைவர் சென்ற நிலையில் காரை கிரேன் மூலம் மீட்டனர். குடியரசுத் தலைவர் திளெபதி முர்மு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற போது, அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்பமரியாதையும் வழங்கப்பட்டது. அவருக்கு கோவில் சார்பாக குங்குமம், மீனாட்சி அம்மன் சிலை பிரசாதமாக வழங்கப்படது குடியரசு தலைவர் வருகையையொட்டி 3500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவை ஈஷா
அரசு சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்குப்பின் சற்று நேரம் ஓய்வு எடுத்த அவர், பிற்பகலில் புறப்பட்டு மீண்டும் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். கோவை சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கோவை ஈஷா மையத்திற்கு சென்றார். மகாசிவாரத்திரி விழா இன்று மிகப்பெரிய அளவில் கோவை ஈஷா மையத்தில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது இந்த விழாவில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications