ஹேப்பி நியூஸ்! இன்னும் ஆறே மாதங்கள்.. நாட்டில் ஒரு சுங்கச்சாவடி கூட இருக்காது! மத்திய அமைச்சர் உறுதி

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாடு வந்துள்ள மத்திய போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதற்கிடையே சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆறு மாதங்களில் சுங்கச்சாவடிகள் இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றார்.

மத்தி அமைச்சர்கள் பலரும் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு மத்திய அரசின் திட்டங்கள் எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே தற்போது சாலை போக்குவரத்து மற்றும் விமான துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தமிழகம் வந்துள்ளார். இன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பல முக்கிய கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

மத்திய இணை அமைச்சர்

மத்திய இணை அமைச்சர்

முன்னதாக டெல்லியில் இருந்து விமான மூலம் மதுரை வந்த மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மதுரை விமான நிலைய விரிவாக்கம் என்பது நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்தாலும் அதைச் செயல்படுத்தவில்லை. இது தொடர்பான குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்குத் தேவையான நிலத்தைத் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை" என்று பதிலளித்தார்.

மதுரை விமான நிலையம்

மதுரை விமான நிலையம்

மதுரை விமான நிலைய 24 மணி நேரச் சேவை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் சேவை நடத்திக் கொள்ள விமானச் சேவை நிறுவனங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நள்ளிரவு இரண்டு மணிக்கு வேண்டுமென்றாலும் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் நாங்கள் அதற்குத் தயாராக உள்ளோம்.

சர்வதேச விமான நிலையம்

சர்வதேச விமான நிலையம்

மதுரை ஏர்போர்ட்டை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்கிறீர்கள்... சர்வதேச விமான நிலையமாக அறிவித்தால் தான் சர்வதேச விமானங்கள் வந்து செல்ல முடியும் என்று இல்லை.. சுங்க இலாக்கா சேவை இருந்தால் போதும்... சர்வதேச விமானங்கள் வந்து செல்லலாம்.. மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாக்கா சேவை ஏற்கனவே உள்ளது. இதனால் ஏற்கனவே மதுரையில் சர்வதேச விமானங்கள் வந்து சென்று கொண்டு தான் இருக்கிறது. சர்வதேச விமான சேவை அதிகமாகும் பட்சத்தில் இது குறித்து ஆலோசிக்கலாம்" என்றார்.

கொரோனா விவகாரம்

கொரோனா விவகாரம்

தொடர்ந்து கொரோனா பரவல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். தேவையான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் அதனைச் செயல்படுத்திக் கடைப்பிடிக்க வேண்டியது பொதுமக்கள் தான்" என்றார். இதையடுத்து சிவகங்கை சென்ற அவர், அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்படுவது குறித்து ஆய்வுக் கூட்டத்தில் சிங் கலந்து கொண்டார்.

சுங்கச்சாவடிகள்

சுங்கச்சாவடிகள்

பின்னர் அங்குச் செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் வி கே சிங், "ஒன்றிய அரசின் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்த விபரங்களை மத்திய அரசிடம் தெரிவிக்க உள்ளேன்.. இன்னும் 6 மாதத்தில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மூலம் வாகன எண்கள் கண்டறியப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும். இனி வாகனங்கள் செல்வதில் தடை ஏற்படாது.. நான் வேலூர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாடாளுமன்ற பாஜக தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன்.. தெற்கில் பாஜக வலுவடைந்து வருகிறது. அதற்காகக் கடுமையாக அனைவரும் உழைத்து வருகிறோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+