"தொட்டதெல்லாம் துலங்கும்".. அப்பதான் எடப்பாடி பேசினார்.. அதுக்குள்ளேயே.. "கூடாரமே காலி".. வீடியோ வேற
எடப்பாடி பழனிசாமி மதுரையில் திருமண வீட்டில் பேசி முடித்ததுமே கலைந்து சென்றுவிட்டதாம் கூட்டம்
மதுரை: எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் மதுரையில் பங்கேற்று நடத்தி வைத்த, திருமண விழாவின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.. என்ன காரணம்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டும், அதிமுகவின் 51வது பொன்விழா ஆண்டை முன்னிட்டும் 51 ஏழை எளிய ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமணமாக அம்மா பேரவை செயலாளர் ஆர்பி.உதயகுமார் ஏற்பாட்டில் நேற்றைய தினம் மதுரையில் நடைபெற்றது.
இந்த விழாவில் 51 ஜோடிகளில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயாகுமரின் மகளும் ஒருவராவர்.. இந்த 51 ஜோடிகளுக்கு தனது கரங்களில் தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார் எடப்பாடி பழனிசாமி.

மைக்கில் பூரிப்பு
புது திருமணமான 51 ஜோடிகளுக்கும் கல்யாண சீர்வரிசையாக 1லட்சம் மதிப்பிலான கட்டில், பீரோ, பாத்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.. இந்த திருமண நிகழ்வு நடைபெற்று கொண்டிருந்த அதேநேரம்தான், சுப்ரீம்கோர்ட்டில் அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு வெளியாகி இருந்தது.. அடுத்த நிமிடமே, கல்யாண மேடையிலேயே மைக்கில் தீர்ப்பு குறித்து அறிவிக்கப்படவும், மண்டபமே கைகளை தட்டி ஆரவாரம் செய்தது.. மங்கல வாத்தியம் மீண்டும் முழங்கப்பட்டது.. எடப்பாடிக்கு முகமெல்லாம் பூரிப்பு. அதிமுக ஆதரவாளர்கள் எடப்பாடிக்கு வாழ்த்து சொல்லி அவரை திக்குமுக்காட வைத்துவிட்டனர். இதற்கு பிறகு, கல்யாண வீட்டில் எடப்பாடியின் பேச்சு மிகுந்த கவனத்தை பெற துவங்கிவிட்டது.

தூங்கவேயில்லை
மதுரையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி மேடையில் பேசிய போது, "தீர்ப்பு வருவதை முன்னிட்டு நான் கலங்கி போயிருந்தேன்... பயத்துடன் இருந்தேன்.. தீர்ப்பு எவ்வாறு வரும் என்பதை எண்ணி இரவு முழுவதும் எனக்கு தூங்காமல் இருந்தேன்.. நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் இன்றைக்கு அம்மா கோவிலில் வேண்டிய சில நிமிடத்தில் நல்ல தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறார். அதிமுகவை அடக்க முடக்க நினைத்த எட்டப்பர்கள் திமுகவிற்கு B டீமாக இருந்தவர்கள் முகத்திரை தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் கிழிக்கப்பட்டு உள்ளது.

பட்டி + தொட்டி
திருமங்கலம் ஃபார்முலா நடைபெற்ற இடத்தில் இருந்து பேசுறேன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக மட்டுமல்லாது இந்தியாவிலேயே யாரும் செய்யாததை திமுக அரசு வாக்காளர் மக்களை அடைத்து வைத்துள்ளது. அதிமுகவை வீழ்த்த வேண்டுமென ஸ்டாலின் எத்தனையோ முறை அவதாரம் எடுத்தார்.. அனைத்தும் அதிமுக தொண்டர்களால் நிறுத்தப்பட்டது. ஆடுகளை அடைத்து வைப்பது போல் வாக்காளர்கள் அடைக்க வைத்து அவர்களுக்கு தேவையானதை அனைத்தும் செய்து கொடுத்து வாக்கு சேகரிக்கிறார்கள். வாக்காளர்கள் தான் நீதிபதிகள் நாங்கள் அவர்களை நம்புகிறோம். 6 மணி நேரத்துக்கு மேலாக ஒரே இடத்தில் வாக்காளர்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள் என்று பேசியிருந்தார்.

கலைந்த ஜனம்
எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பேசி முடித்ததுமே, மண்டபத்தில் குழுமியிருந்த மொத்த கூட்டமும் கலைந்துவிட்டது.. இதனால், திருமண மண்டபம் கொஞ்ச நேரத்திலேயே கூட்டமின்றி காணப்பட்டது.. இந்த திருமண விழாவினை முன்னிட்டுதான், திருமங்கலம் அருகே சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் இதற்காக பிரம்மாண்ட திருமண மேடை அமைக்கப்பட்டிருந்தது.. மொய் எழுதுமிடம்., உணவு அருந்துமிடம் என தனித்தனியாக பிரத்யேகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.. குறைந்தபட்சம் 50,000 பேர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், உணவு அருந்துவதற்கு 6 இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து காலை 7.00 மணி முதல் பந்தி பரிமாறப்பட்டு வந்தது.

மொய் டெக்
அதே போல் மொய்-டெக் என்ற பெயரில் 102 கம்ப்யூட்டர்கள் மற்றும் பணம் என்னும் மெஷின்களுடன் மொய் எழுதும் பணியில் பணியாளர்கள் ஆர்வமாக ஈடுபட துவங்கினர். ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், தொண்டர்கள்., நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றதையடுத்து, இந்த திருமண விழா ஜரூராக ஆரம்பமானது.. இந்த கல்யாணத்துக்காக, ஒன்றரை லட்சம் பத்திரிகைகள் விநியோகிக்கப்பட்டதால், எப்படியும் ஒரு லட்சம் பேராவது வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.. அதற்கான சாப்பாடும் வகைவகையாக தயாரானது..

ஜாலி அரட்டை
ஆனால், எடப்பாடி பேசி முடித்ததுமே பெரும்பாலான கூட்டமும் கலைந்து சென்றுவிட்டது.. இதனால் பந்தல் காலியாக காணப்பட்டது.. கல்யாண சாப்பாட்டை சாப்பிடக்கூட ஆள் இல்லாமல் போய்விட்டதாம்.. மொய் செய்யவும் யாரும் வரவில்லை.. இதனால் மொய் கவுண்ட்டர்கள் காலியாக காணப்பட்டன.. மேலும், மொய் கவுண்டர்களில் இருந்த பணியாளர்கள், ஜாலியாக அரட்டை அடித்துகொண்டும், செல்போன்களில் பேசிக் கொண்டும் இருந்தனர்.. சிலர் அப்படியே பெஞ்சில் படுத்து தூங்க ஆரம்பித்துவிட்டனர்.. இந்த காட்சிகள் எல்லாம் வீடியோவாக வெளியாகி கொண்டிருக்கிறது.

துலங்குதே துலங்குதே
இதனிடையே, எடப்பாடியின் இந்த வெற்றி நிரந்தரமில்லை என்று டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வரும்நிலையில், ஒருவரின் உண்மையான செல்வாக்கு என்ன என்பதை தேர்தல் முடிவுகள்தான் தீர்மானிக்கும் என்றும் அரசியல் விமர்சகர்களும் கருத்து சொல்லி வருகிறார்கள்.. ஆனால், எடப்பாடிக்கு தொட்டதெல்லாம் துலங்க போவதாக அவரது ஆதரவாளர்கள் பூரித்து சொல்கிறார்கள்.. கிட்டத்தட்ட முழுக் கட்சியுமே எடப்பாடி பழனிசாமி வசம் வந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.. இந்த தீர்ப்பின் தாக்கம், நடக்கப்போகும் இடைத்தேர்தலில் மட்டுமல்லாமல், வரப்போகும் எம்பி தேர்தல்வரை பிரதிபலிக்கும் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.. என்ன நடக்க போகிறது.. பார்ப்போம்..!!!!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications