யார் அந்த ஐஏஎஸ் அதிகாரி.. நிகிதாவிற்கு கேட்டது உதவி செய்த அந்த புள்ளி யார்? தயாரான ரிப்போர்ட்?
மதுரை: மதுரை அஜித் குமார் கொலை வழக்கில் ஒரு முக்கியமான ஐஏஎஸ் அதிகாரியின் தலையீடு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பான விசாரணை அறிக்கை ஒன்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் டெல்லி அதிகாரி, சென்னை அதிகாரி எனப் பலரின் பெயர்கள் அடிபடுகின்றன. அஜித் குமார் கொலை வழக்கில் தலையிட்ட அந்த ஐஏஎஸ் அதிகாரி யார் என்ற கோணத்தில் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. அப்படி ஒரு அதிகாரி உண்மையில் இருக்கிறாரா, அவர் தலையிட்டதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை முதலமைச்சரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர், மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் நகைகளைத் திருடியதாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில், நிகிதாவிற்கு எதிரான வழக்குகளை உடனடியாக விசாரிக்கக் கோரி திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மோசடி வழக்குகளையும் விசாரிக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
அஜித் குமார் மரணத்தில் நிகிதாவின் பங்கு
போலீஸ் விசாரணையில், இளைஞர் அஜித் குமார் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகிதா என்ற பெண் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், நிகிதா மீது அடுத்தடுத்து மோசடி புகார்கள் வந்துள்ளன.
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 16 லட்சம் ரூபாய் வரை நிகிதா பலரிடம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. மேலும், மோசடி செய்த பணத்துடன் தலைமறைவாகிவிடும் பழக்கம் நிகிதாவுக்கு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. திருமங்கலத்தில் பிடிபட்டபோது, பணம் கேட்டவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். "நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்பீர்களா? உங்களைக் கொலை செய்துவிடுவேன்" என்று அவர் மிரட்டியதாக அவர்கள் கூறுகின்றனர்.
பழைய புகார்கள்
நிகிதா மீது 2011ஆம் ஆண்டு திருமங்கலத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது அவரது குடும்பத்தினர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும், அவர் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அல்லாப்பட்டியில் உள்ள தனது சொந்த வீட்டை ஒரு கல்லூரி நிர்வாக இயக்குனருக்கு விற்பதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளார். மேலும், ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் தற்போது நிலுவையில் உள்ளன.
திட்டமிட்ட நாடகமா?
நிகிதா இதுவரை சுமார் ரூ.65 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் அணிந்திருக்கும் நகைகள் கூட மோசடி பணத்தில் வாங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நகைகள் திருடு போனதாக நாடகமாடி நிகிதா பணம் பறிக்க திட்டமிட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். இது குறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பெரிய பின்னணி உள்ளதா?
நிகிதாவுக்குப் பெரிய அளவில் அறிமுகம் இல்லாமல் இத்தகைய மோசடிகளைச் செய்திருக்க முடியாது என்று பலர் நம்புகின்றனர். இந்த மோசடிக்கு பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக, நிகிதாவின் மோசடி நடவடிக்கைகள் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருவதால், இந்த வழக்கு மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நிகிதா, மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் நகைகளைத் திருடியதாக அளித்த புகாரின் பேரில், அவருக்கு எதிரான வழக்குகளை உடனடியாக விசாரிக்கக் கோரி திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அஜித்குமார் மரணத்திற்கு காரணமான நிகிதா
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமார் என்ற இளைஞர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீஸ் தாக்கியதால்தான் அவர் இறந்தார் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது தாய் சிவகாமியுடன் வசித்து வரும் நிகிதா, தனது தாயின் ஸ்கேன் எடுப்பதற்காக மதுராபுரம் கோயிலுக்கு சென்றபோது நகைகள் திருட்டு போனதாக புகார் அளித்துள்ளார். இதன் காரணமாகவே அஜித் குமார் உயிரிழந்தார். நிகிதா கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே அஜித் குமார் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிகிதாவிற்கு எதிரான வழக்குகளை உடனடியாக விசாரிக்கக் கோரி திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிகிதாவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பழைய மோசடி வழக்குகளையும் விசாரிக்க கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவர் பிடிபட்டால், இந்த வழக்கில் அஜித் குமாரை டார்ச்சர் செய்ய அழுத்தம் கொடுத்த ஐஏஎஸ் அதிகாரியும் சிக்கும் வாய்ப்புகள் உள்ளன. திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் நிகிதா மீது தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் இந்த வழக்கு வரும் நாட்களில் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications