கவனிச்சீங்களா? எங்கே பேப்பர்ல பெயர் எதையும் காணோம்? ஆரம்பத்திலேயே ஆத்திரம் அடைந்த எடப்பாடி.. ஏன்?
மதுரை: நேற்று நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தனது உரையை தொடங்கிய போதே கோபம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுகவின் மதுரை பொதுக்கூட்டம் நடந்து முடிந்துள்ளது. கிட்டத்தட்ட அதிமுகவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் பொதுக்கூட்டமாக இது அமைந்துள்ளது. 3 லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின் அதிமுகவில் நடக்கும் மிகப்பெரிய மாநாடு இது. எடப்பாடி பழனிசாமிக்கு கீழ் நடக்கும் முதல் மிகப்பெரிய மாநில மாநாடு இது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
சென்னை, கொங்கு, தென் மண்டலங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். இந்த எழுச்சி மாநாடு காரணமாக அதிமுக புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றுதான் கூற வேண்டும்.நேற்று காலை 8 மணிக்கு கொடியேற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அங்கே 51 ஆண்டுகளை குறிக்கும் வகையில் 51 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது. இதை ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி. ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவ கொடி கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றினார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின் நடந்த முதல் பெரிய பொதுக்கூட்டம் இது. மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்த கூட்டம். நடந்தது. கிட்டத்தட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்தி உள்ளார் என்கிறார்கள்.
எடப்பாடி பேச்சு: இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தொடக்கத்திலேயே கோபம் அடைந்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தொடக்க உரை நிகழ்த்தும் போது அதில் முதல் பேஜில் அவர் வாழ்த்த வேண்டியவர்களின் பெயர்கள் இல்லை. இதனால் கோபம் அடைந்த எடப்பாடி.. என்ன இது.. எங்கே முதல் பேஜ்.. பேரையே காணோம் என்று கோபமாக கேட்டார். அதன்பின் உதவியாளர் ஒருவர் வந்து அந்த பேஜை கொடுத்தார்.
தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரை பொதுக்கூட்டத்தில் பேச்சு கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் எம்ஜிஆர். அவர் உருவாக்கிய கட்சி அதிமுக.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி அதிமுக கட்சி. அதிமுகவின் பொன்விழா ஆண்டு இது: 51 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் நாம் ஆட்சி செய்தோம். எடப்பாடி பழனிசாமி உழைப்பால் உயர்ந்தவன்.

இங்கே உள்ள ஒவ்வொரு தொண்டர்களும் உழைப்பாளிகள். அதிமுக தொண்டன் என்று சொன்னாலே பெருமை. அதிமுகவை எதிர்க்க எந்த கட்சியாலும், கொம்பனாலும் முடியாது.
தொண்டன் உழைப்பால் உருவானது அதிமுக. 10 வருடம் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். புயல், வெள்ளம், கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டோம்.
கொரோனா பற்றி தெரியாத போதும் கூட அதன் பரவலை தடுத்தோம். மதுரை மண் ராசியான மண், இங்கே தொடங்கியது எல்லாம் வெற்றிதான். முதல் மாநாட்டை இங்கே நடத்துவது மகிழ்ச்சி.
காவிரி பிரச்சனையை தீர்த்து வைத்தது அதிமுகதான் . உச்ச நீதிமன்றத்தில் இதற்காக தீர்ப்பை பெற்ற அரசு அதிமுக அரசு. நான் விவசாயி.. அதன்பின்தான் அரசியல்வாதி. விவசாயிகள் கஷ்டம் எனக்கு தெரியும் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications