டாஸ்மாக் உள்ள பகுதியில் மக்கள் எதிர்ப்பை மீறி மனமகிழ் மன்றம் என்று புதிய மதுக்கடை ஏன்.. ஐகோர்ட்
மதுரை: அறந்தாங்கியில், பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் ஏற்கனவே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. தற்போது மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் ஏற்கனவே டாஸ்மாக் கடை செயல்படும் பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதையும் மீறி மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக மதுக்கடை திறப்பது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த சபீக் யாசிர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு நடந்து வருவதற்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் ஏற்கனவே டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது.

ஆனால் தற்போது அறந்தாங்கியில், பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதனால் இப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மாணவ, மாணவிகள், பெண்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.
இதனை கருத்தில் கொண்டு புதிய மதுபான கடையை திறக்க அனுமதிக்கக்கூடாது என பொதுமக்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பேரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கடை திறக்கப்பட இருக்கிறது. இதற்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு மனுவில் சபீக் யாசிர் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் எதிர்ப்பையும் மீறி அங்கு மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கடை திறப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்கள். விசாரணை முடிவில், மனுதாரர் பகுதியில் ஏற்கனவே டாஸ்மாக் கடை செயல்படுகிறதா? என்பது பற்றி வக்கீல் கமிஷனர் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications