மதுரையில் நிஜ ரத்த 'த'ரித்திரம்... முக அழகிரி 'ஆள்' விகே குருசாமி Vs ராஜபாண்டி.. அடங்காத 'கொலை' பசி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாநகரில் ஈரக்குலையை நடுங்க வைக்கும் முன்பகை இப்போது கர்நாடகா மாநிலம் பெங்களூர் வரை துரத்திச் சென்றிருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. திமுக முன்னாள் நிர்வாகி விகே குருசாமி, அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜபாண்டிக்கும் இடையேதான் இந்த ரத்த 'தரித்திர' யுத்தம் நடந்து வருகிறது.

விகே குருசாமி, ராஜபாண்டி இந்த இருவருமே ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கருத்தரிவான் பகுதியை சேர்ந்தவர். ரத்த சொந்தங்களைப் போல ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள்தான். ஒரு உள்ளாட்சித் தேர்தலில் இருவருக்கும் இடையே தொடங்கிய மோதல் இன்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடருவதுதான் துயரம். விகே குருசாமி, ராஜபாண்டி கோஷ்டிகளுக்கு இடையேயான மோதலில் கமுதி மண்ணில் 10க்கும் மேற்பட்ட்டோரின் தலைகள் உருண்டோடி இருக்கின்றன. அவ்வளவு கொலை வெறியோடு தலைகளை வெட்டி வீசி இருக்கிறது இருதரப்பும்.

Why MK Azhagiri aide VK Guruswamy was attacked in Bengaluru?

மதுரையில் தஞ்சம்: மதுரைக்கு இடம் பெயர்ந்த விகே குருசாமியும் ராஜபாண்டியும் திமுக, அதிமுகவில் அடைக்கலமாகினர். திமுகவில் அப்போது கொடிகட்டிப் பறந்த தென்மண்டல மாமன்னன் மு.க.அழகிரியின் அரவணைப்பில் வலது கரமாக வலம் வந்தார் விகே குருசாமி. அதனாலேயே மதுரை மாநகராட்சி திமுக மன்டல தலைவர் பதவியும் கிடைத்தது. ஒரு கட்டத்தில் அழகிரியின் அரசியல் சகாப்தம் முடிந்தது. இதேபோல ராஜபாண்டியும் அதிமுகவில் பதவிகளை பெற்று வலம் வந்தார்.

2016-ல் படுகொலை: 2016-ம் ஆண்டு மதுரை வளையங்குளத்தில் ஓடும் பேருந்தில் விகே குருசாமியின் மருமகன் முத்துராமலிங்கம் என்ற காட்டுவாசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்போது விகே குருசாமியின் வீடுகளும் சரமாரியாக தாக்கப்பட்டன. அப்போது இன்ஸ்பெக்டர் ஒருவரையும் ராஜபாண்டி கோஷ்டி போட்டு தள்ள முயற்சித்தது. ஆனால் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தி ராஜபாண்டி கோஷ்டியை ஓடவிரட்டினார்.

எரித்து கொலை- எடப்பாடி தலையீடு: காட்டுவாசி என்ற முத்துராமலிங்கத்தின் படுகொலைக்கு பழியாக ராஜபாண்டியன் மகன் முனுசாமி என்ற தொப்புளியை அடுத்த ஆண்டே 'தூக்கி' சென்றது. தொப்புளி என்ன ஆனார் என்பதே யாருக்கும் தெரியாமல் போனது. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடத்திய எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் நேரடியாகவே ராஜபாண்டியன், மகன் மாயமானது குறித்து புகார் தெரிவித்தார். இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் ராஜபாண்டியன் மகன் தொப்புளி என்ற முனுசாமியை விகே குருசாமி கோஷ்டி கடத்தி சென்று எரித்து சாம்பலாக்கிய கொடூரம் அம்பலமானது.

மதுரை என்கவுண்ட்டர்: இந்த பழிக்கு பழிவாங்கலின் தொடர்ச்சியாக 2018-ல் மதுரையில் இன்னொரு பயங்கரம் நடந்தது. விகே குருசாமி கதையை முடிக்க சிக்கந்தர் சாவடியில் பதுங்கி இருந்த ராஜபாண்டி கோஷ்டியின் மந்திரி என்ற முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் இருவரும் என்கவுண்ட்டரில் போலீசார் சுட்டுக் கொலை செய்தனர்.

கமுதி டூ கர்நாடகா: இந்த கொலைகளுக்கு நடுவே கள்ளத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு தயாரித்தது என பல வழக்குகளில் விகே குருசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே வந்து பெங்களூரில் தஞ்சம் அடைய முயற்சித்தார். ஆனால் 25 ஆண்டுகாலமாக கமுதியில் தொடங்கிய பகை கர்நாடகா வரை துரத்திச் சென்று சரமாரியாக விகே குருசாமியை வெட்டிப் போட்டது. இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் விகே குருசாமி பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+