எடப்பாடியாரே!.. மோடி போட்டோ எங்கே?.. இதுதான் உங்க கூட்டணி தர்மமா?.. எம்பி வெங்கடேசன் பொளேர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மாண்புமிகு எடப்பாடியாரே! இது என்ன வகை கூட்டணி தர்மம்? மோடியின் படத்தை பயன்படுத்தச்சொல்லுங்கள். பிளீஸ்! மதுரை எம்பி வெங்கடேசன் அதிமுகவின் துண்டு பிரசுரங்களை பதிவிட்டு கிண்டல் செய்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து தொகுதியிலும் திமுக , அதிமுக, மநீம, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட பல்வேறு கட்சியினர் தீவிர பிரசாரத்தை செய்து வருகிறார்கள். தாங்கள் தொகுதிக்கு எம்எல்ஏ ஆனால் என்னவெல்லாம் செய்வோம் என்று கவர்ச்சி வாக்குறுதிகளை வீசி வருகிறார்கள்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மதுரை மேயர் ராஜன் செல்லப்பா, நோட்டீஸ் அச்சடித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு வருகிறார்.

 திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

ராஜன் செல்லப்பா அடித்துள்ள துண்டு பிரசுரங்களில் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் படங்களுடன், அதிமுக அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் ஆட்சிக்கு வந்தால் செய்யப்போகும் திட்டங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

 வெங்கடேசன் எம்பி

வெங்கடேசன் எம்பி

இந்நிலையில் மதுரை தொகுதி எம்பி வெங்கடேசன், ராஜன் செல்லப்பா அச்சடித்து விநியோகிக்கும் துண்டு பிரசுரத்தில் பிரதமர் மோடி படம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் படங்கள் இடம் பெறவில்லையே ஏன் என்று கிண்டல் செய்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

கூட்டணி தர்மமா?

இது தொடர்பாக அவர் கூறுகையில், மாண்புமிகு எடப்பாடியாரே! உங்கள் கட்சியின் வேட்பாளர்கள் மோடியின் படத்தை போடாமல், BJP யின் பெயரைக்கூடப் போடாமல் துண்டறிக்கைகள் அடித்து வாக்கு கேட்கிறார்கள். இது என்ன வகை கூட்டணி தர்மம்? மோடியின் படத்தை பயன்படுத்தச்சொல்லுங்கள். பிளீஸ்! என்று கூறியுள்ளார்.

கேள்வி

கேள்வி

இதற்கு ட்விட்டரில் அவருக்கு பதில் அளித்துள்ள ஒருவர், மோடியின் படத்தைப் போடச் சொல்லி பிஜேபிகாரர்களலல்லவா கேட்க வேண்டும்- நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். இன்னொருவர் அஇஅதிமுக தலைவர்கள மட்டும் போட்டு விளம்பரம் செய்து ஓட்டு கேட்டு ஜெயிக்க எங்களுக்கு திராணி இருக்கு. ஆனா திமுக தயவு இல்லாம கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதில கூட ஜெயிக்காது என விமர்சித்துள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+