அலங்காநல்லூர் பைனான்சியர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. 2-ஆவது மனைவியே கொன்றது அம்பலம்
Recommended Video
மதுரை: அலங்காநல்லூர் பைனான்சியர் வெட்டிக் கொலை செய்யபட்ட வழக்கில் கூலிப்படையை ஏவி 2-ஆவது மனைவியே கொலை செய்தது அம்பலமானது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நடராஜ் நகரில் வசித்து வரும் பைனான்சியர் இளங்கோவன். கடந்த வெள்ளிக்கிழமை 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் தற்போது அதை வெளியிட்டுள்ளனர். அதில் இரு சக்கர வாகனத்தில் வரும் 6 பேர் கொண்ட மர்ம கும்பல், இளங்கோவன் வீட்டை நோக்கி பயங்கர ஆயுதங்களுடன் வருகின்றனர்.

கேட்டை மூட முயற்சி
அப்போது தன்னை நோக்கி வருவதை அறிந்த இளங்கோவன் வீட்டின் முன்னிருந்த கிரில் கேட்டை மூட முயற்சிக்கிறார். ஒரு பாதி கேட்டை மூடும் போது மறுபாதி கேட் வழியாக ஒருவர் உள்ளே நுழைக்கிறார். அப்படியே இளங்கோவனை இழுத்து போட்டு வெட்டுகிறார். உடனே மற்ற 5 பேரும் அவரை நோக்கி வந்து சரமாரியாக வெட்டி விட்டு இளங்கோவன் உயிரிழந்ததை அறிந்தவுடன் தப்பிவிடுகின்றனர்.

இரண்டாவது திருமணம்
காவல்துறை நடத்திய விசாரணையில் தத்தநேரியை சேர்ந்த இவரது மனைவி இறந்து போன பின்னர் அதே பகுதியை சேர்ந்த அபிராமியுடன் இளங்கோவனுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து கணவரை பிரிந்த அபிராமியை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இளங்கோவன்.

மூத்த மகளிடம் சில்மிஷம்
இதையடுத்து அபிராமி, அவரது 3 பெண்களையும் அழைத்துக் கொண்டு அலங்காநல்லூரில் உள்ள நடராஜ் நகரில் உள்ள வீட்டிலேயே தங்க வைத்திருந்தார். இந்த நிலையில் அபிராமியின் மூத்த மகள் அனுசுயாவுடன் இளங்கோவன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

தாயிடம் அழுத மகள்
இந்த நிலையில் அனுசுயா காதல் திருமணம் செய்து கொண்டு மதுரைக்கு சென்றுவிட்டார். ஆனால் விடாமல் அங்கும் வந்து அனுசுயாவுக்கு இளங்கோவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது தாய் அபிராமியிடம் அனுசுயா தெரிவித்துள்ளார்.

கூலிப்படையினரை தேடும் போலீஸ்
இதனால் ஆத்திரம் அடைந்த அபிராமி கூலிப்படையினரை ஏவி இளங்கோவனை கொலை செய்துள்ளார். இதையடுத்து அபிராமி, அனுசுயா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் தப்பியோடிய கூலிப்படை கும்பலை தேடி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications