எப்ப பார்த்தாலும்.. "அந்த" இடத்தில் அடித்தே கொன்ற மனைவி.. காட்டி கொடுத்த ரத்த துளிகள்.. மதுரை ஷாக்
பாலியல் தொல்லை தந்த கணவனை அடித்து கொன்றுள்ளார் மனைவி
மதுரை: பாலியல் தொல்லை ஓவராக தந்ததால், கட்டின புருஷனை கொன்றுவிட்டார் மனைவி.. மதுரையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை தந்து வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர்.. இவருக்கு சுதீர் என்ற இன்னொரு பெயரும் உண்டு.. 34 வயதாகிறது.. இவருடைய மனைவி அருள்செல்வி.. கல்யாணம் ஆகி 8 வருஷங்கள் ஆகின்றன... ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார்...

தம்பதி இருவருமே வேலை பார்த்து வந்துள்ளனர்.. மதுரை கலெக்டர் ஆபிசில் சுந்தர் தற்காலிகமாக ஊழியராக இருந்துள்ளார்.. கீழ்செம்பட்டியில் உள்ள பிரைவேட் பள்ளியில் அருள்செல்வி, டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.
சுந்தருக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.. இதனாலேயே தம்பதிக்குள் அடிக்கடி தகராறும் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது.. இந்நிலையில், இன்று விடிகாலை, சுந்தர் திடீரென கட்டிலில் இருந்து மயங்கி கீழே விழுந்துவிட்டாராம்.
அதனால் அவரை குடும்பத்தினர் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்... அங்கு சுந்தரை டாக்டர்கள் டெஸ்ட் செய்தபோது, அவரது உயிர் தளத்தில் ரத்தம் இருந்திருக்கிறது.. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தனர்.
திருமங்கலம் போலீசாரும் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.. அருள்செல்வியைதான் முதலில் விசாரித்தனர்.. அப்போது, தனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை தந்து வந்ததாகவும், ஒருகட்டத்தில் பாலியல் வன்முறையிலும் கணவன் ஈடுபட்டதாலும்தான் அடித்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்..
தொடர்ந்து அருள்செல்வியிடம் விசாரணை நடந்து வருகிறது. சுந்தரின் உடல் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.. அந்த ரிப்போர்ட் வந்தால்தான் சுந்தர் இறப்பு குறித்து முழுமையாக தெரியவரும். பாலியல் தொல்லை தந்த கணவனை, மனைவியே அடித்து கொன்ற சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications