சாத்தான்குளம்! தூக்கு தண்டனை பெற்ற 9 போலீஸாரும் மேல்முறையீடு செய்ய முடியுமா? வழக்கறிஞர் விளக்கம்
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 9 குற்றவாளிகளும் மேல்முறையீடு செய்வார்களா, ஜாமீன் கோருவார்களா என்ற கேள்விக்கு வழக்கறிஞர் பதில் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வழக்கறிஞர் ஜெயசிங், செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கான அபராதம் 24 லட்சம், இரண்டாவது குற்றவாளி பாலகிருஷ்ணனுக்கு ரூ 16.80 லட்சம், 3ஆவது குற்றவாளி ரகு கணேஷ் ரூ 5.20 லட்சம், 4ஆவது குற்றவாளி முருகனுக்கு அபராதம் ரூ 10.10 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏ5 சாமதுரைக்கு ரூ. 5.60 லட்சம் அபராதம், ஏ6 முத்துராஜுக்கு ரூ 3.20 லட்சம் அபராதம், ஏ7 செல்லதுரைக்கு ரூ 14.40 லட்சம் அபராதம், ஏ8 தாமஸ் பிரான்சிஸுக்கு ரூ 10 லட்சம், ஏ9 வெயில்முத்துவுக்கு ரூ 10.54 லட்சம் என பெனிக்ஸின் தாயாருக்கு ரூ 1 கோடியே 40 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படுகிறது.
அந்த 9 பேரும் கொடுக்க தவறினால், அந்த சொத்துக்களை பறிமுதல் செய்து அந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி நிறைய விஷயங்களை இந்த தீர்ப்பில் தெரிவித்துள்ளார். நீதிபதி கூறுகையில் "இந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்கா என்பதை பார்க்க வேண்டும். தந்தை- மகன் இருவரும் நிராயுதபாணிகளாக இருந்த நிலையில் அவர்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் காவல் துறை தாக்கியுள்ளது.
மக்களுக்கு உதவ வேண்டிய காவல் துறை இப்படி அடித்து கொன்றிருக்கிறார்கள். எனவே இதை அரிதிலும் அரிதான வழக்காகத்தான் பார்க்க வேண்டும். காவல் துறை லாக் அப்பில் வைத்து யாரையாவது துன்புறுத்தினால் அவர்களுக்கு எந்தவித தயவு தாட்சண்யம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் தெரிவித்துள்ளது.
அது போல் மத்திய அரசும் இந்த 9 பேருக்கு உச்சபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்றுதான் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அது போல் மாநில அரசு பரிந்துரையில் ஏ1 ஸ்ரீதர் மீது இரு வழக்குகளும் ஏ3 ரகு கணேஷ் மீதும் வழக்கு இருப்பதாக தெரிவித்திருந்தது. தமிழக அரசும் இந்த 9 பேருக்கும் கருணையே காட்டக் கூடாது, உச்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
தீர்ப்பில் நீதிபதி கூறுகையில், இந்த செயல் மனித கண்ணியத்தை மீறுவதாக இருக்கிறது. சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதை நீதிமன்றம் சாதாரணமாக கடந்து விட முடியாது. இவர்களை திருத்துவதற்காக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த நீதிமன்றத்திற்கு இல்லை. எனவே இவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது என இந்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
குற்றத்தின் அளவை பார்க்கும் போது இவர்கள் கொரோனா காலத்தில் கடையை திறந்தார்கள் என்பதற்காக கொடூரமாக தாக்கியுள்ளார்கள். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்காவிட்டால் இந்த உடலை அடக்கம் செய்யும் முன்பே இந்த வழக்கும் அடக்கம் செய்யப்பட்டிருக்கும்.
தந்தை, மகன் இருவரிடையேயும் எந்த ஆயுதங்களும் இல்லாத நிலையில் அவர்களை தாக்கிய இந்த 9 பேரது குற்றங்களை மன்னிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற குற்றங்கள் இனி நடைபெறக் கூடாது என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும்.
இந்த குற்றவாளிகளின் வயதையும் குடும்பச் சூழலையும் காரணம் காட்டி இவர்களை விடுவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் நல்ல மனநிலையில்தான் இருந்து இந்த குற்றத்தை செய்துள்ளார்கள். இவர்கள் படித்தவர்கள், இவர்கள் மீது எந்த கருணையும் காட்ட முடியாது.
வேலியே பயிரை மேய்வது போல்! மக்களை காக்க வேண்டிய காவல் துறையே மக்களை அடித்துக் கொன்றுள்ளார்கள். மேலதிகாரி சொன்னால்தான் இதை செய்தோம் என கூறுவதை ஏற்க முடியாது. இவர்கள் செய்த காரியங்களை பார்க்கும் போது மனமே வெந்துவிடும் போல் இருக்கிறது. பெனிக்ஸ் தாயாரின் துக்கத்தை யாராலும் துடைக்க முடியாது.
இவர்களுக்கு ஆயுள் தண்டனை சரியாக இருக்காது. தனி நபர் தவறு செய்வதற்கும், அரசு அதிகாரிகள் தவறு செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு குடும்பத்தின் ஆணிவேரே பிடுங்கப்பட்டுள்ளது. எனவே இதை சாதாரண குற்றமாக கருத முடியாது.
இது அரிதிலும் அரிதான ஒரு வழக்கு. நமக்கு ஆயுள் தண்டனைதானே கொடுப்பார்கள், 14 ஆண்டுகளில் சிறையில் இருந்து வெளியே வந்துவிடலாம் என குற்றவாளிகள் நினைத்திருப்பர். ஆனால் இந்த வழக்கில் உங்களை விடுவதற்காக இந்த நீதிமன்றம் தயாராக இல்லை.
ஜெயராஜுக்கும் பெனிக்ஸுக்கும் புட்டத்தில் காயம் இருக்கிறது. அவர்களை அவர்களே அடித்து கொண்டார்கள் என சொன்னீர்கள். ஏற்கனவே கோவில்பட்டியை சேர்ந்த இருவரின் புட்டங்களிலும் காயங்கள் இருந்தன. உங்கள் காவல் நிலையத்திற்கு வருவோர் அவர்களை அவர்களே அடித்துக் கொள்வார்களா என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
எங்களுக்கு இந்த தீர்ப்பில் மகிழ்ச்சியாக இருக்கிறது என வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது இந்த வழக்கில் மேல்முறையீடு செல்ல வாய்ப்பிருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஜெயசிங், "இந்த நாட்டில் எந்த வழக்கிற்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு. ஆனால் நீதிபதி எழுதியிருக்கும் தீர்ப்பை பார்க்கும் போது அந்த 9 பேரும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்றாலும் இந்த கோர்ட்டில் கொடுத்த தீர்ப்புதான் கடைசி தீர்ப்பாக இருக்கும்.
மத்திய, மாநில அரசுகளிடம் நீதிபதி அறிக்கை கேட்ட போது அதில் அவர்கள் அந்த 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என தெளிவாக தெரிவித்துவிட்டார்கள். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் பார்வையில் நடந்த ஒரு வழக்கு. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் இவர்கள் ஜாமீனில் கூட வெளியே வர முடியாது. ஜாமீன் வழக்கை விசாரிக்கும் போது பிரதான வழக்கு குறித்து வாதிடும் போது இவர்களது ஜாமீன் மனுக்கள் தானாக ரத்தாகிவிடும். இவ்வாறு வழக்கறிஞர் ஜெயசிங் தெரிவித்திருக்கிறார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன்












Click it and Unblock the Notifications